ஜிகா வைரஸ் தாக்குதல் ஒத்துக் கொண்டது இந்திய அரசு!

உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் ஜிகா  வைரஸ் தாக்குதல் இருவருக்கு இந்தியாவில் உள்ளதாக இந்திய அரசு உலக சுதாகார மையத்திடம் ஒத்துக் கொண்டிருக்கிறது.

கடந்த 2007 மற்றும் 2013–ம் ஆண்டுகளில், பசிபிக் நாடுகளில் ‘ஜிகா’ வைரஸ் தாக்கியது. அமெரிக்க நாடுகளான பிரேசில் மற்றும் கொலம்பியாவிலும், ஆப்பிரிக்காவிலும் அக்கிருமி தாக்கியது. ஜிகா வைரஸ், தென் அமெரிக்கா, மத்திய அமெரிக்காவை சேர்ந்த 23 நாடுகளில் தாக்கியது. இதனால் ஏராளமானோர் உயிரிழந்தனர்.

இந்நிலையில் இந்தியாவில் ஜிகா வைரஸ் பாதிப்பில்லை என்று கூறப்பட்டு வந்த நிலையில் அகமதாபாத்தை சேர்ந்த 3 பேருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு இருந்தது. என உலக சுகாதார அமைப்பிடம் மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. 2016-ம் ஆண்டு பிப்ரவரியில் 3 பேருக்கும் சுிகா வைரஸ் பாதிப்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது என மத்திய அரசு கூறியுள்ளது.

உலகில் முதல்முறையாக ’ஜிகா’ வைரசுக்கு தடுப்பு மருந்து இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.  ’மேக் இன் இந்தியா’ திட்டத்தின் மிகவும் முக்கியம் வாய்ந்த நடவடிக்கையாக ஐதராபாத் ஆய்வு விஞ்ஞானிகள், உலகில் முதல் முறையாக ‘ஜிகா’ வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டு பிடித்தது குறிப்பிடத்தக்கது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*