தரங்கம்: தனுஷின் மலையாள எண்ட்ரி

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வரும் தனுஷ், ‘வுண்டர்பார் பிலிம்ஸ்’ என்ற பெயரில் திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினார். இதன் மூலமாக ‘காக்கா முட்டை’ மற்றும் ‘விசாரணை’ போன்ற நல்ல கதையம்சம் கொண்ட படங்களை தயாரித்தார். நல்ல கதையை உடைய புதிய இயக்குநர்களுக்கு தனது தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் வாய்ப்பளித்து வருகிறார்.

இந்நிலையில் டாமினிக் அருண் இயக்கத்தில் தனுஷ் ஒரு மலையாள படத்தை தயாரிக்கிறார் என அறிவிக்கப்பட்டது. ‘தரங்கம்’ என பெயரிடப்பட்ட இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. இதனை தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். இந்த படத்தில் டொவினோ தாமஸ் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இது ஒரு டார்க் காமெடி திரைப்படமாக உருவாகியிருக்கிறது. இந்த படத்தின் மூலமாக மலையாள திரையுலகில் கால்பதித்த தனுஷ், அருண் ஜார்ஜ் இயக்கத்தில் உருவான ‘லட்டூ’ திரைப்படத்தை வழங்கவுள்ளார்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*