விஜய் சேதுபதி ஒரு சைக்கோ?

விஜய் சேதுபதி தற்போது பல்வேறு திரைப்படங்களில் நடித்து வருகிறார். ‘டிமாண்டி காலனி’ படத்தின் இயக்குநர் அஜய் ஞானமுத்து புதிதாக இயக்கியுள்ள திரைப்படம் ‘இமைக்கா நொடிகள்’.

நயன்தாரா, அதர்வா மற்றும் அனுராக் கஷ்யப் ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்த படத்தில் விஜய் சேதுபதி ஒரு சிறப்பு கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என அறிவிக்கப்பட்டது. ஆனால் சமீபத்தில் வெளியான இதன் டீஸரில் விஜய் சேதுபதியின் முகத்தை காட்டவில்லை. அனுராக் கஷ்யப்பை வில்லன் போல காட்டுகின்றனர். இந்த டீஸரில் ஒருவரை கட்டிவைத்து மர்ம நபர் ஒருவர் நரம்புகளை அறுப்பது போன்ற காட்சிகள் இடம் பெருகிறது. இந்த காட்சியில் நடித்தது விஜய் சேதுபதியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி இருக்கும் பட்சத்தில் விஜய் சேதுபதி முதன்முதலாக சைக்கோ கதாபாத்திரத்தில் நடிக்கும் திரைப்படமாக ‘இமைக்கா நொடிகள்’ இருக்கும். கேமியோ பிலிம்ஸ் இந்தியா தயாரித்துள்ள இந்த படத்துக்கு ஹிப் ஹாப் ஆதி இசையமைத்து இருக்கிறார்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*