”அவர்களின் இலக்கு நான் தான்” -ப.சிதம்பரம்!

முந்தைய காங்கிரஸ் அரசில் நிதியமைச்சராக இருந்த முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரத்திற்கு  சொந்தமான வீடுகள், அலுவலகங்களில் சி.பி.ஐ ரெய்டு நடத்தியது. ஐ.என்.எஸ் நிறுவனத்திற்கு உரிமம் வழங்கியதாக தொடரப்பட்ட வழக்கின் அடிப்படையில் இந்த ரெய்ட் நடத்தியதாகக் கூறிய சி.பி.ஐ பின்னர் அமைதியாகி விட்டது.

இந்நிலையில் இந்த ரெய்ட் பற்றி  விளக்கம் அளித்துள்ள ப.சிதம்பரம்  “அந்நிய முதலீடுகளுக்கு அனுமதியளித்த விவகாரத்தில் கார்த்தி சிதம்பரத்திற்கு எந்த தொடர்பும் இல்லை. ஐ.என்.எஸ் மீடியா நிறுவனத்திற்கும் கார்த்தி சிதம்பரத்திற்கும் ஒரு தொடர்பும்  இல்லை. அந்நிறுவனம் முறையாகவே விதிகளுக்கு உட்பட்டே நிதித்துறை செயலாளர் மூலம் அனுமதி பெற்றது. சி.பி.ஐ விசாரணைக்கு கார்த்தி சிதம்பரம் முழு ஒத்துழைப்பு அளிக்கிறார். எஃப்ஐஆரில் என் பெயர் இல்லாவிடினும் நான்தான் சி.பி.ஐ-யின் இலக்கு. சோதனை நடத்தி 2 வாரங்களாகியும் சி.பி.ஐ அடுத்த கட்டமாக எதையும் செய்யவில்லை” என்று கூறியுள்ளார்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*