கன்றை வெட்டிய காங்கிரசார்: கண்டித்த ராகுல்காந்தி.

Kochi: Youth Congress organised Beef Festivals in front of Ernakulam BJP office in Kochi on Saturday. PTI Photo(PTI5_27_2017_000110B)
கேரளாவில் கன்றுக்குடி ஒன்றை வெட்டி சமைத்து உண்ட இளைஞர் காங்கிரஸ் உறுப்பினர்களை அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி காட்டுமிராண்டிகள் என வர்ணித்துள்ளார்.
சந்தைகளில் இறைச்சிக்காக மாடுகளை விற்க தடை  விதித்ததால் மாட்டிறைச்சி உணவு உண்பவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.  இதற்கு எதிராக கேரளாவில் பெரும் போராட்டங்கள்  வெடித்தது, பாஜக தவிர்த்த கட்சிகள் அனைத்தும் மாடுகளை வெட்டி சமைத்து மக்களுக்கு விருந்து வைத்தனர். இது  பெரும்பான்மை மக்கள் கலந்து கொள்ளும் உணவு திருவிழா போன்று கேரளத்தில் நடந்து வரும் நிலையில், இளைஞர் காங்கிரசார்  சிலர் ஆர்வக்கோளாறில் கன்றுக்குட்டி ஒன்றை பிடித்து வந்து வெட்டி அதை சமைத்து மக்களுக்கு கொடுத்தனர். இதை சிலர் கண்டித்தனர்.
இது தொடர்பாக,   காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல் காந்தியும் இத்தகையை செயல் ஏற்றுக்கொள்ள முடியாது என்று தெரிவித்துள்ளார். இது குறித்து ராகுல் காந்தி தனது அலுவலக டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:- “ கேரளாவில் நடைபெற்றது முட்டாள்தனமானது, காட்டுமிராண்டித்தனமான இந்த செயல் என்னாலும் காங்கிரஸ் கட்சியாலும் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும். இந்த சம்பவத்திற்கு நான் கடும் கண்டனம் தெரிவிக்கிறேன்” என்று தெரிவித்தார். கன்றுக்குட்டியை கொன்றவர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிந்துள்ளது கேரள காவல்துறை.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*