தடைகள் தாண்டி வருகிறார் ‘காலா’

பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் பணிபுரியும் இரண்டாவது படம் ‘காலா’ (கரிகாலன்). தனுஷ் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சில தினங்களுக்கு முன் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த போஸ்டரில் ரஜினி அமர்ந்திருக்கும் ஜீப் எண் அம்பேத்கர் இறந்த வருடம், BR என்பது டாக்டர்.அம்பேத்கர் பெயரை குறிக்கும் சொல் என குறியீடு கண்டுபிடித்து சிலர் விமர்சித்தார்கள், சிலர் பாராட்டினார்கள்.

        

ரஞ்சித், ரஜினியுடன் இணையும் இரண்டாவது படம் என்பதால் ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு கூடியிருக்கிறது. ‘பாட்ஷா’ திரைப்படத்துக்கு பிறகு ரஜினி மீண்டும் மும்பை டான் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். நேற்று (மே 28, 2017) முதல் மும்பையில் இதன் படப்பிடிப்பு வேலைகள் தொடங்கியது. இதில் ரஜினிக்கு ஜோடியாக ஹுமா குரேசி நடிக்கிறார். சமுத்திரகனி முக்கிய கதாபாத்திரம் ஏற்றுள்ளார். படப்பிடிப்பு தளத்தில் இருக்கும் புகைப்படங்கள் தற்போது வெளியாகி வருகின்றன. தீபாவளி அல்லது ரஜினியின் பிறந்தநாளன்று இந்த திரைப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*