தன் இறப்பை அறிவித்த ராம்கோபால் வர்மா

சமூக வலைத்தளங்களை விட்டு பிரபலங்கள் வெளியேறுவது தொடர்ந்து கொண்டிருக்கிறது. தங்களுடைய ரசிகர்களுக்காக ஃபேஸ்புக், ட்விட்டர் போன்றவற்றில் அதிகாரப்பூர்வ பக்கங்களை துவங்கி ரசிகர்களை மகிழ்வித்து தனது கருத்துகளை பதிவு செய்து வந்தார்கள். ஆனால் சிலர் அதில் சர்ச்சையான கருத்துகளை கூறி தங்களை பிரபலப்படுத்தி கொள்கிறார்கள். இயக்குனர் ராம்கோபால் வர்மா அதற்கு சரியான உதாரணம். எல்லா விசயங்களிலும் சர்ச்சையான கருத்தை பதிவு செய்து அவமானப்படுவது அவருக்கு பழக்கமான ஒன்று. ஜல்லிக்கட்டு. சிரஞ்சீவி குடும்பத்தினரைக் கிண்டல் செய்தது, பவன் கல்யாணுடன் வம்பு என பல சர்ச்சைகளில் சிக்கியிருக்கிறார்.

இவர் இயக்கி சமீபத்தில் வெளிவந்த ‘சர்க்கார் 3’ படம் படுதோல்வியைத் தழுவியது. இந்த சூழ்நிலையில் நேற்று திடீரென ட்விட்டரை விட்டு விலகுவதாக அறிவித்தார். இனி இன்ஸ்டாகிராம் மூலம் மட்டுமே பேச இருப்பதாக கூறியுள்ளார். இதுதான் என்னுடைய ட்விட்டர் மரணத்திற்கு முன் நான் பதிவிடும் கடைசி ட்விட். இதற்காக வருத்தப்படமாட்டேன் இப்போது முதல் வேலை செய்ய முடிவெடுத்துள்ளேன். இவ்வாறு கூறி ட்விட்டரை விட்டு வெளியேறும் தேதியை இறப்பு என்ற பெயரில் பதிவிட்டு வெளியேறிவிட்டார்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*