மாட்டிறைச்சி விழா நடத்திய ஐஐடி மாணவர் மீது தாக்குதல்!

இறைச்சிக்காக மாடுகள் விற்கப்படுவதற்கு மத்திய பாஜக அரசாங்கம் தடை விதித்தை எதிர்த்து பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது. கடந்த மே 28ஆம் தேதி ஐஐடி மெட்ராஸ் மாணவர்களின் அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்டம் சார்பாக இந்த சட்டத்தை எதிர்த்து மாட்டிறைச்சி உண்ணும் விழா நடைபெற்றது. இவர்களின் முகநூல் பக்கத்தில் இதற்கான அழைப்பு விடுக்கப்பட்டது. 50-க்கும் அதிகமான மாணவர்கள் கலந்துகொண்டு மத்திய அரசாங்கத்தின் இந்த சட்டத்தை புறக்கணிக்கும் விதமாக மாட்டிறைச்சி உண்டு தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். இந்த விழாவை தலைமை ஏற்று நடத்திய ஆராய்ச்சி மாணவர் சூரஜை இன்று மர்ம நபர்கள் கொடூரமாக தாக்கியுள்ளனர். சூரஜ், அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்டத்தில் உறுப்பினராக இருப்பவர்.

ஐஐடி உணவகத்தில் இருந்த சூரஜை இழுத்து வந்து சக மாணவர்கள் தாக்கியிருக்கிறார்கள். இதில் சூரஜின் கண் பார்வை பாதிக்கப்பட்டு சங்கரநேத்ராலயா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தொடர் சிகிச்சை நடைபெற்று வருகிறது. மேலும் மாட்டிறைச்சி உண்ணும் விழாவில் கலந்துகொண்ட அத்தனை மாணவர்களுக்கும் மிரட்டல் விடுத்துள்ளனர். இந்த செயலை செய்தது ABVP(அகில பாரத வித்தியார்த்தி பரிசத்) அமைப்பை சேர்ந்தவர்களாக இருக்கும் என சந்தேகிக்கப்படுகிறது. இதுகுறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*