ஜெ சொத்தை பறிமுதல் செய்த பழனிசாமி அரசு!

சொத்து குவிப்[பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஜெயலலிதா சசிகலா ஆகியோரின் சொத்துக்களை பறிமுதல் செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

ஜெ மறைவுக்கு பிறகு அதிமுக இரண்டாக உடைந்ததையடுத்து சசிகலாவை எப்படியாவது கட்சியிலிருந்து வெளியேற்ற வேண்டும் என்று பன்னீரின் பின்னணியில் இருந்து பாஜக திட்டமிட்டது. அவருக்கு 122 எம்.எல்.ஏக்கள் ஆதரவு இருந்தும் அவரை முதல்வராகவிடாமல் பாஜக தாமதப்படுத்தியது. பாஜக நினைத்தது போலவே சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா சிறை சென்றார். தொடர்ந்து சசிகலாவை அரசியலில் இருந்தே ஒழித்து கட்டும் வேலையை பாஜக செய்ய ஆரம்பித்தது. இதற்கிடையே பழனிசாமியும் மோடி பக்கம் சாய்ந்துவிட்டார். அதன்படி சசிகலாவை அனைத்து விதங்களிலும் ஒழித்துக்கட்டுவதற்கான வேலையை பாஜக அரசு கையிலெடுத்து இருக்கிறது.

அதன்படி சொத்து குவிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் ஜெ, சசி உள்ளிட்டோருக்கு சொந்தமாக உள்ள 68 சொத்துக்களை பறிமுதல் செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதன்படி தூத்துக்குடி, சென்னை, காஞ்சிபுரம், திருவாரூர் உள்ளிட்ட 6 மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அந்தந்த மாவட்டங்களில் உள்ள ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோரின் சொத்துக்கள் கையகப்படுத்தப்படவிருக்கின்றன. சொத்துக்களை கையகப்படுத்திய பின் அங்கு ஒரு பலகை வைக்கப்படும். அப்பலகையில் இந்த சொத்து தமிழக அரசுக்கு சொந்தமானது. இதனை யாரும் பத்திரப்பதிவு செய்யக்கூடாதென்று எழுதப்படும் என தெரிவிக்கபட்டுள்ளது. அதன்பிறகு கைப்பற்றப்பட்ட சொத்துக்கள் ஏலம் விடப்படவிருக்கின்றன. லெக்ஸ் பிராபர்ட்டி உட்பட 6 நிறுவனங்களின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படவிருக்கின்றன. மேலும் இது தொடர்பான அறிக்கையை தமிழக அரசு பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தால் தமிழக அரசு தாக்கல் செய்யவுள்ளது.

ஜெயலலிதாவே என் தலைவி என்று கூறிவந்த பழனிசாமி தற்போது அவர் முதல்வராக இருக்கும் போதே அவரது தலைவியின் சொத்துக்களை பறிமுதல் செய்கிறார். பழனிசாமியின் இந்நடவடிக்கை சசிகலாவுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும். ஏனெனில் பழனிசாமியை முதல்வராக்கியதே சசிகலாதான். சசிகலாவிடமிருந்து கட்சி, ஆட்சி, என பறித்த பாஜக தற்போது பழனிசாமியை கையில் வைத்துக் கொண்டு சசிகலாவின் சொத்துக்களையும் பறிக்க ஆரம்பித்திருக்கிறது என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள். பழனிசாமி பன்னீர் செல்வத்தைவிட மோடியின் அதி தீவிர விசுவாசியாகி வருகிறார் என்பது மட்டும் நிச்சயம் தெரிகிறது.

2 Comments

  1. உண்மையை நேர்மையான முறையில் செய்து கொண்டு உள்ளீர்கள் என்று சொல்லி விட்டேன்

Leave a Reply

Your email address will not be published.


*