பசு காவலர்களின் மதவெறி தாக்குதல்//video

மஹாராஸ்டிர மாநிலம் மாலேகான் பகுதியில் இறைச்சியை சுமந்து சென்றவர்களை தாக்கி ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என சொல்லும்படி வற்புறுத்தியுள்ளனர் பசு காவலர்கள்.

மாட்டிறைச்சியை எடுத்து செல்கின்றனர் என பசு காவலர்கள் தாக்குதலில் இறங்கியிருக்கிறார்கள். ஒரு இளைஞரை இரு நபர்கள் கொடூரமாக தாக்கி ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என கூறும்படி வற்புறுத்தியது வீடியோவில் பதிவாகியுள்ளது. பசு காவலர்களின் தாக்குதல் வரிசையில் சமீபத்தில் நடந்தது இந்த சம்பவம். இந்த சம்பவத்தில் தொடர்புடைய 7 நபர்களை கைது செய்துள்ளனர். அந்த இளைஞரை தாக்கிய இருவர் மீதும் 295a என்ற ஐபிசி பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் எடுத்து வந்தது என்ன இறைச்சி என கண்டறிய நாக்பூர் பரிசோதனை நிலையத்துக்கு அனுப்பியுள்ளார் வாசிம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர். மத்திய பாஜக அரசாங்கம் இறைச்சிக்காக மாடுகள் விற்கப்படுவதை தடை செய்த பின்னர் பசு காவலர்களின் அராஜகம் அதிகமாக இருக்கிறது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*