கருணாநிதி புதிய வீடியோ!

திமுக தலைவர் கருணாநிதியின் வைர விழா நிகழ்ச்சி குறித்த விழா மலரை கருணாநிதியிடம் காட்டி ஸ்டாலின் ஆலோசனை நடத்துவது குறித்த வீடியோ வெளியாகி உள்ளது.

இந்தியாவின் மிக மூத்த அரசியல் தலைவர் திமுக தலைவர் மு.கருணாநிதி. கடந்த 60 ஆண்டுகளாக தமிழக அரசியலிலும் இந்திய அரசியலிலும் தவிர்க்க முடியாத சக்தியாக திகழ்ந்து வருகிறார். திமுக தலைவர் கருணாநிதியின் வாழ்க்கை வரலாறும் தமிழக அரசியலின் 75 ஆண்டுகால வரலாறும் கிட்டத்தட்ட ஒன்றாகத்தான் அமையும். அப்படிப்பட்ட அரசியல் தலைவரின் 94-வது பிறந்த நாள் நாளை வரவிருக்கிறது. அத்துடன் அவர் தொடர்ந்து 60 ஆண்டுகளாக சட்டமன்ற உறுப்பினராக இருந்து வருவதால் அவர் பிறந்த நாளோடு அவருக்கு வைரவிழாவையும் சேர்த்து நடத்த திமுக கட்சி திட்டமிட்டிருக்கிறது. அதன்படி நாளை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில்இவ்விழா  நடைபெறவிருக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த விழாவில் பங்கேற்று கருணாநிதி பற்றி பேசுவதற்காக. காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி, பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார், புதுவை முதலமைச்சர் நாராயணசாமி,  ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத் யாதவ், தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர்  பரூக் அப்துல்லா, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா உள்ளிட்ட 10 தேசிய தலைவர்கள் பங்கேற்கவிருக்கிறார்கள்.

 

 

இந்நிலையில் வைரவிழா குறித்த விழா மலரை திமுக தலைவர் கருணாநிதியிடம் காட்டி ஸ்டாலின் ஆலோசனை நடத்தும் வீடியோ வெளியாகியிருக்கிறது. அந்த வீடியோவி. பல வண்ணங்களில் நவீன முறையில் தயாரிக்கப்பட்ட நூறு பக்கங்களுக்கும் மேலுள்ள விழா மலரை திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கருணாநிதியிடம் காண்பிக்கிறார். மேலும் அந்த வீடியோவில் ட்ரக்யோஸ்டமி பேண்டேஜ் கழுத்தில் அணிந்து கருணாநிதி அமர்ந்திருக்கிறார். கருணாநிதியின் உடல்நிலை காரணமாக அவர் விழாவில் பங்கேற்கமாட்டார் என்று திமுக ஏற்கனவே அறிவித்திருக்கிறது. கருணாநிதி விழாவில் பங்கேற்பார் என்று எதிர்ப்பார்த்திருந்த திமுக தொண்டர்களுக்கு இந்த அறிவிப்பு பெரும் ஏமாற்றத்தை அளித்திருந்த நிலையில் தற்போது வெளியாகியிருக்கும் இந்த வீடியோ அவர்களுக்கு புதிய உற்சாகத்தை அளித்திருக்கிறது.

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*