நம் அறிவுத்திறனுக்கு காரணம் அம்மாவா!

குழந்தைகளின் அறிவுத்திறன் செயல்பாடுகளுக்கு பெற்றோர்களில் யாருடைய மரபணு காரணம் என்ற கேள்விக்கு விஞ்ஞான ரீதியாக பதில் கண்டுபிடித்துள்ளனர் மரபியல் விஞ்ஞானிகள். அம்மாவின் மரபணு மற்றும் அப்பாவின் மரபணு கொண்டு ஆராய்ச்சிகள் மேற்கொண்ட அமெரிக்காவின் வாஷிங்டன் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் தாயுடன் உணர்வுப்பூர்வமான பந்தம் கொண்டுள்ள குழந்தைகளின் மூளை பகுதிகள் நன்றாக வளர்ச்சி அடைந்துள்ளது எனக் கண்டுபிடித்துள்ளனர். பொதுவாக பெண்கள் ஒரே (XX) வகையான இனக் குரோமோசோம்களையும், ஆண்கள் இரண்டு தனித்தனி (XY) இனக் குரோமோசோம்களையும் கொண்டுள்ளனர்.

7 ஆண்டுகள் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் முடிவில் தாயுடன் உணர்வுப்பூர்வமான பந்தத்தில் இருக்கும் குழந்தைகளின் அறிவுத்திறன் 10 சதவீதம் வரை அதிகரித்திருப்பது தெரியவந்துள்ளது. X குரோமோசோம்களில் உள்ள அறிவுத்திறனுக்கு காரணமான ஜீன்களே குழந்தைகளின் அறிவுத்திறனுக்கு காரணமாக அமைவதாகவும், Y குரோமோசோம்களில் காணப்படும் அறிவுத்திறனுக்கான ஜீன்கள் செயலிழந்து விடுவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. அதாவது தாயின் குரோமோசோம்களில் காணப்படும் ஜீன்களே குழந்தையின் புத்திசாலி தனத்திற்கு காரணமாக அமைவதாகவும், தந்தையின் புத்திசாலி தனத்திற்கான ஜீன்கள் குழந்தையின் அறிவுத்திறனுக்கு பங்களிப்பதில்லை என்பதும் தெரியவந்துள்ளது. சுருக்கமாக சொல்லப்போனால் நமது அறிவுத்திறனுக்கு காரணம் அம்மாதானே ஒழிய அப்பா அல்ல. ‘தாயை போன்ற அழகு, தந்தையை போன்ற அறிவு’ என்று பொதுவாக சொல்லலாம். ஆனால் மரபியல் ஆய்வுகள் இதற்கு நேர்மாறான முடிவை தந்துள்ளன என்பதுதான் ஆச்சர்யமான விடயம்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*