ஸ்டாலின் சரியான பாதையில் பயணிக்கிறார்: ராகுல் காந்தி

கருணாநிதிக்கு திமுக எடுக்கும் வைரவிழாவில் தேசிய காங்கிரஸ் கட்சியின் துணை தலைவர் ராகுல் காந்தி கலந்துகொண்டு பேசினார்.

“கலைஞர் கருணாநிதி அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். அவர் நல்ல உடல்நலத்தோடு இருக்க வேண்டும் என வாழ்த்துகிறேன். நாம் ஒருவரால் அதிகமாக நேசிக்கப்படும்போது வலிமை கிடைக்கிறது. அதிகமாக ஒருவரை நேசிக்கும்போது தைரியம் பிறக்கிறது என அறிஞர் ஒருவர் சொன்னார். கலைஞர் கருணாநிதி அவர்கள் கோடிக்கணக்கான மக்களால் நேசிக்கப்பட்டவர், அதுதான் அவரது மிகப்பெரிய பலமாகும். அதேபோல் தமிழக மக்களை அதிகமாக நேசிப்பதன் மூலம் தைரியத்தை பெற்றுள்ளார். இந்த இரண்டும் சேர்ந்து அவரது அறிவாற்றலாக திகழ்கிறது. மக்களின் பிரச்சனைகளை புரிந்துகொண்டு அவர்களுக்காக சிந்திப்பவர்தான் கருணாநிதி. எனக்கு முன் பேசிய நண்பர்கள் சொன்னார்கள், அரசியலில் பல ஆண்டுகளாக மக்கள் பணியாற்றியுள்ளார். ஐந்து முறை முதலமைச்சராக பதவியேற்ற அவரது வரலாற்று சாதனையை எவராலும் செய்ய முடியாது, தோல்வியை பார்க்காத மனிதர் அவர். இதற்கெல்லாம் காரணம், மக்கள் அவரை ஆழமாக நேசிக்கின்றனர். அவர் மக்களை நேசிக்கிறார். கருணாநிதியின் குரல் தமிழக மக்களின் குரலாக இருக்கும். இந்திய மக்கள் அறிவானவர்கள் என மேடையில் இருக்கும் அத்தனை தலைவர்களுக்கும் ஏற்றுக் கொள்வார்கள். நாங்கள் மக்கள் சொல்வதை கேட்க விரும்புகிறோம், நீங்கள் எங்களுக்கான பதிலை கூற வேண்டும். அதனை நாங்கள் நடைமுறை படுத்துவோம். கருணாநிதி எழுதும் கடிதங்கள் மக்களின் மனநிலையை பிரதிபலிக்கும். அவர் கற்பனை கதைகளை எழுதுவதில்லை, மக்களின் பிரச்சனைகள் குறித்துதான் எழுதுவார். தமிழ் கலாச்சாரம், தமிழர் பண்பாடு இந்தியாவின் வலிமையாக இருக்கும். உங்களின் தேவைகளை செயல்படுத்துவதுதான் எங்கள் கடமை. மக்களை கலந்தாலோசிக்காமல் பண மதிப்பிழப்பு திட்டத்தை மோடி அறிவிக்கிறார், அவரது தனிப்பட்ட விருப்பத்தை மக்கள் மீது திணிக்கிறார். இந்தியா பொருளாதார வீழ்ச்சிய கண்டது, இதுபோன்ற மடத்தனங்களை இனி பொறுக்க முடியாது. எதிர்கட்சிகளை நசுக்குவதுதான் மத்திய அரசின் வேலையாக உள்ளது. இந்த விழாவை ஏற்பாடு செய்த ஸ்டாலின் அவர்களுக்கு என மனமார்ந்த நன்றியை கூற கடமை பட்டிருக்கிறேன். ஒரு மாபெரும் மனிதனின் இடத்தை நிரப்ப வேண்டிய நிலையில் ஸ்டாலின் இருக்கிறார். இன்று கலைஞரை புகழ்ந்து பேசுவது போல ஸ்டாலினையும் ஒருநாள் புகழ்ந்து பேசுவோம். அவர் சரியான பாதையில் பயணிக்கிறார்” என தன் உரையை முடித்தார்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*