50 ஆயிரம் கோடி ரூபாயில் கூடங்குளத்தில் 5 மற்றும் 6-வது அணு உலை!

கூடங்குளத்தில் 50 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் 5 மற்றும் 6-வது அணு உலைகள் நிறுவ இந்தியா – ரஷ்யா இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

இந்தியாவிலேயே, திருநெல்வேலி மாவட்டத்தில் கூடங்குளம் பகுதியில் இருக்கும் கூடங்குளம் அணுமின் நிலையம் தான் பெரிய அணுமின் நிலையம் ஆகும். இதில் இருந்து  மொத்தமாக 4000 மெகா வாட்ஸ் மின்சக்தி உற்பத்தி செய்யப்படுகின்றது. அது தென் இந்தியாவுக்கு மட்டும் கொடுக்கப்படுகின்றது. இந்த அணுமின் நிலையம் 2002-ஆம் ஆண்டும் மார்ச் மாதம் 31-ஆம் தேதி துவங்கப்பட்டது.  இதில், மொத்தம் நான்கு யுனிட்கள் இயங்குகின்றன. ஒவ்வொரு யுனிட்டின் மூலமும் குறைந்தது 1000 மெகா வாட்ஸ் வரை மின்சக்தி உற்பத்தி செய்ய முடியும். இந்த அணுமின் நிலையத்தினால், அணுசக்தி பேரழிவு ஏற்படக்கூடும் என்று 2011-ஆம் ஆண்டு ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் அவர்களை அரசாங்கம் அடக்குமுறை கொண்டு ஒடுக்கியது. மேலும் இந்த அணு உலை ஆபத்தானது என ஆதாரங்களை அடுக்கி வைத்தும் அரசாங்கம் கேட்கவில்லை. இந்திய அணுசக்தி பேராசிரியர் டாக்டர் ஸ்ரீகுமார் பானர்ஜி, இது இந்தியாவின் மிகப்பெரிய பாதுகாப்பான திட்டம் என்று திட்டவட்டமாகக் கூறினார்.

இந்நிலையில், ரஷ்யா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி அங்கு நடந்த இருதரப்பு ஆண்டு உச்சி மாநாட்டில் கலந்துகொண்டார். அப்போது கூடங்குளத்தில் 5 மற்றும் 6-வது அணு உலைகளை அமைப்பதற்கான ஒப்பந்தம், பிரதமர் மோடி மற்றும் ரஷ்ய அதிபர் புதின் முன்னிலையில் கையெழுத்தானது. இது குறித்து இந்திய அணுசக்தி கழகத்தின் நிர்வாக இயக்குநர் எஸ்.கே.சர்மா கூறுகையில், கூடங்குளத்தில் 5 மற்றும் 6-வது உலைகள் 50 ஆயிரம் கோடி ரூபாயில் நிறுவப்படவுள்ளது. அதில், 5-வது உலையில் 66 மாதங்களில் பணிகள் முடிக்கப்பட்டு மின்உற்பத்தி செய்யப்படும். இதன் பிறகு 6 மாதத்தில், அடுத்த அணு உலையில் மின்உற்பத்தி செய்யப்படும். இந்த திட்டத்திற்கு ரஷ்யா 70 சதவீதம் கடனாக வழங்குகிறது. மற்ற 30 சதவீதம் அணுசக்தி கழகத்தின் பணம் அல்லது அரசு வழங்கும். என்று அவர் கூறினார். அடுத்த 7 ஆண்டுகளில் இந்தப் பணிகள் முடியும் என கணிக்கப்பட்டுள்ளது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*