டிஜிட்டல் வாசி : “ரெஸ்ட் இஸ் ஹிஸ்டரி என்பார்கள்… ரெஸ்ட் எடுக்காமல் உழைத்ததே இவர் ஹிஸ்டரி”

எத்தனை எத்தனை அரசியல் சர்ச்சைகள் இவர் பேரில் இருந்தாலும் தமிழகத்தையும் திராவிடத்தையும் இன்றுவரை தாங்கி நிற்கும் ஒரே தூண் கலைஞர் கருணாநிதி மட்டுமே. நடிகர்களைத் தாண்டி தனது எழுத்துக்களின் மூலம் மாபெரும் புரட்சி செய்தவர். திராவிட வளர்ச்சிக்கு பெரும்பங்காற்றி இன்று வரை அதனை காத்து வருபவர். முதுமையையும் பொருட்படுத்தாது சக்கர நாற்காலியில் சட்ட சபையில் வலம் வந்தவர். இன்னும் இந்த 94வயது மனிதனைப் பற்றி நெட்டிசன்கள் என்னென்ன சொல்கிறார்கள் என்பதை பார்ப்போம்…
@Herald Saravana
சனியன்று ஞாயிறுக்கு பிறந்தநாள்
#HBDKalaignar94
@ஏ வடிவேல்
கலைஞரப்பிடிக்காதுனு சொல்றவன் கூட வாழ்ந்தா கலைஞர் மாதிரி வாழனும் ஆசப்படுவான்…
அவர்தான் கலைஞர் ..அஞ்சுகச்செல்வர்.
#ஹே பி அய்யா
@Maha Lakshmi
மனசாட்சி உறங்கும் நேரம் பார்த்துதானே மனகுரங்கு ஊர் சுற்ற கிளம்பிவிடுகிறது..
#கலைஞர்
@Venki Rko
KISS என்றாள் உதடுகள் ஒட்டாது,
முத்தம் என்றாள் தான் உதடுகள் கூட ஒட்டும்..!
#HBDKalaignar

 

 

 

 

 

 

 

 
@Herald Saravana
ரெஸ்ட் இஸ் ஹிஸ்டரி என்பார்கள்…
ரெஸ்ட் எடுக்காமல் உழைத்ததே இவர் ஹிஸ்டரி…
தட்றா க்ளாப்ஸ…
#HBDKalaignar94
@Thippu Sulthan K
எழுபது வருட அரசியல் வாழ்க்கை முள் படுக்கை இப்பயாச்சும் ஒய்வு எடுக்கட்டும் ஏன்யா திரும்பி வரனும்னு கூப்புடுறீங்க..அவர் சமாதானமா ஒய்வு எடுக்கட்டும்
.
நீங்கல்லாம் எதுக்கு இருக்கீங்க..?
.
#hbd_தலைவர்
@Sathiesh ElaVel
சமூக சமன்பாட்டை கோயிலுக்குள்ளயே கொண்டுபோய் அவனுங்களுக்கு கலக்கிவிட்டது போதும்
#HBDKalaingar94
@Soman Raja
முகநூலை இன்று #மு_க_நூலாக மாற்றிய
எம் தலைவா எங்கள் குரளோவியமே
நீ இன்னும் பல நூறாண்டு வாழந்து எங்களை வழி நடத்த வேண்டும்…..
.
#HBDKalaingar94
@Siva jayarajan
ஆசியாவிலேயே மிகப்பெரிய அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகம் உருவாக்கியவர்
#HBDKalaingar94
@V Rajavelu Raja
#திருநங்கைகள் என்று பெயரிட்டு சமூகத்தில் மூன்றாம் பாலினத்தவரை மரியாதையோடு அழைக்க செய்த திருவாரூர் தந்த திருத்தேரே!!!!
உம்மை வாழ்த்த வயதில்லை..
வணங்கி மகிழ்கின்றோம்.
#HBDKalaingar94

 

 

 

 

 

 

 

 

 

 

Sowmyanarayanan Sundararajan
4 hrs ·
என்னதான் எனக்கு இவரை சுத்தமாக பிடிக்காது என்றாலும் அவரின் தமிழுக்கு என் மரியாதை…
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்
#கலைஞர் #கருணாநிதி ஐயா

@Ka Vikram
ஒரு முறை ஒரு பெண் பத்திரிகை ஒன்றில்,
விதவை என்ற சொல்லில்கூட எங்களால் பொட்டு வைக்க முடியவில்லை
தமிழும் எங்களை வஞ்சித்துவிட்டதென்று ஒரு கவிதை எழுதியிருந்தார்.
அதற்கு கருணாநிதி,
விதவைக்கு கைம்பெண் என்ற மற்றொரு சொல்லும் தமிழில் இருக்கிறது
கைம்பெண் என்று எழுதினால் ஒரு பொட்டு இல்லை
இரண்டு பொட்டுக்கள் வைக்கலாம்
தமிழ் யாரையும் வஞ்சிக்காது வாழவைக்கும்…. என்று பதில் கவிதை எழுதியிருந்தார்…. அவரின் தமிழுக்கு என்றும் அடிமை….. பிறந்தநாள் வாழ்த்துகள் கலைஞர் கருணாநிதி ஐயா….

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*