பெண்ணைக் கொன்று மாட்டைக் காப்பாற்றிய உ.பி போலீஸ்!

இந்துத்துவ சக்திகளின் எழுச்சி இந்தியா முழுக்க காணப்படுகிறது. 2014-ஆம் ஆண்டு நரேந்திரமோடி தலைமையில் பாஜக ஆட்சிக்கு வந்த பின்னர்  பசு பாதுகாப்பு, பெரும்பான்மையினர் விருப்பங்களுக்கு ஏற்ப சிறுபான்மை மதத்தவரை துன்புறுத்துவது போன்ற நிகழ்வுகள் அடிக்கடி நடந்து வருகிறது. பாஜக ஆளும் மாநிலங்களில் பசுவை பாதுகாக்க சட்டமியற்றிய  நிலையில் சட்டவிரோத குழுக்கள் பலவும் பசு பாதுகாப்பு   எனும் பெயரில் மக்களை தாக்கி  வந்த நிலையில், காளைகளை முன் வைத்து இந்தியா முழுக்க படர்ந்து  வரும் அச்சம் இந்துக்களையே அச்சுறுத்துகிறது.

தன்னை துரத்தி வந்த ஒரு காளை மீது சிறு கல்லை வீசிய பெண்ணை  தாக்கிய படுகாயப்படுத்திய நிகழ்வு  உத்திரபிரதேசத்தில் நடந்த நிலையில்,  காளை மீது மோதாமல் தடுக்க போலீஸ் வாகனத்தை 60 வயது பெண் மீது ஏற்றிக் கொன்ற பயங்கரம் உத்திரபிரதேச மாநிலத்தில் நடந்துள்ளது. உத்திர பிரதேசத்தைச் சேர்ந்த ஹரியா டவுனில் 60 வயதுமிக்க உஷா தேவி எனும் பெண் அவரது பேரப்பிள்ளைகளுடன் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த போது, போலீஸ் வாகனம் மோதி உஷாதேவி உயிரிழந்துள்ளார்.

இந்த மரணம் தொடர்பாக விசாரித்த போது கட்டுப்பாடிழந்த போலீஸ் வாகனம் மாட்டின் மீது மோதாமல் இருக்க வண்டியை திருப்ப அது பெண்ணின் மீது மோதியிருக்கிறது. மாட்டின்  மீது மோதி அந்த மாடு இறந்திருந்தால் அரசு மற்றும் பசு காவலர்களின் கோபத்தை சம்பாதிக்க  வேண்டியிருக்கும் என்பதால் வெறு வழியின்றி பெண்ணின்  மீது வாகனத்தை ஏற்றியிருக்கிறார் வாகன ஓட்டி.

போலீஸ் வாகனம் ஏறியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் உஷா தேவி. அவரோடு நடந்து சென்ற  இரண்டு மற்றும் நான்கு வயதுடைய இரு பேரப்பிள்ளைகளும் மற்றுமொருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர் என்று கூறியுள்ளனர்.

உஷா தேவியின் விபத்து விபத்தல்ல. இது ஒரு கொலையாகும். மனிதனை விட மாடு முக்கியம் எனும் எண்ணம் கொண்டு செயல்பட்டு வரும் பசுக்காவலர்களால் நிகழ்த்தப்பட்ட கொலையாகும். இந்த கொடும் சம்பவம் குறித்து உத்திரப்பிரதேச போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*