ஃபஹத் பாசில் இடத்தில் உதயநிதி :

இப்பொழுதுவரை காமெடியன்களை உடன் வைத்துக் கொண்டு நடிப்பதற்கு எளிமையாக உள்ள திரைக்கதைகளை தேர்வுசெய்து நடித்துவரும் உதயநிதி ஸ்டாலின் அடுத்தடுத்து தன்னுடைய படங்களில் வித்தியாசம் காட்ட வேண்டும் என்று படங்களை தேர்வு செய்து வருகிறார். கடைசியாக அவரது நடிப்பில் இயக்குநர் எழில் இயக்கத்தில் வெளியான ’சரவணன் இருக்க பயமேன்’ படம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

இந்த நிலையில் தேசிய விருது என பல விருதுகளை வாங்கிய இயக்குனர் பிரியதர்ஷன் இயக்கத்தில் உதயநிதி நடிக்க இருக்கிறாராம். இந்த தகவலை அவரே தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இப்படம் மலையாளத்தில் ஃபஹத் பாசில் நடித்த ’ மகேஷிண்டே பிரதிகாரம்’ என்ற படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.

1 Comment

  1. பிரபல இயக்குநர் பிரியதர்ஷன் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கவுள்ளார். மலையாளப் படமான Maheshinte Prathikaram-னின் ரீமேக்கில் கூட்டணி அமைத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.


*