மழுப்பிய ஜெயக்குமார்!

எம்.எல்.ஏ தங்க தமிழ்ச்செல்வன் கூறிய கருத்தை கண்டுகொள்ள தேவையில்லை என்று நிதியமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

டிடிவி தினகரனை கட்சியிலிருந்து நீக்கியதையடுத்து அவருக்கு 29 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தெரிவித்திருக்கின்றனர். இதனால் ஆட்சி கவிழ்ந்துவிடுமோ என பதற்றமடைந்த பழனிசாமி எட்டு மாவட்டங்களைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களைச் சந்தித்துப் பேசினார்.இதில் பல்வேறு விஷயங்கள் ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது. இதற்கு முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ தங்க தமிழ்ச்செல்வன், நிதியமைச்சர் ஜெயக்குமார் எந்த அடிப்படையில் அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். அவர்மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். என்று பேசினார்.

இந்நிலையில், முதல்வருடனான சந்திப்பை முடித்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த நிதியமைச்சர் ஜெயக்குமார் பேசுகையில், எட்டு மாவட்ட சட்டமன்ற உறுப்பினர்களைச் சந்தித்துள்ளார் முதல்வர். தொகுதி பிரச்னை பற்றி முதல்வர் உறுப்பினர்களிடம் கேட்டறிந்தார். மேலும், வளர்ச்சிப் பணிகளை விரைந்து முடித்திடுமாறும் அவர் வலியுறுத்தினார். சட்டப் பேரவை கூடஉள்ள நிலையில் அது பற்றியும் எம்.எல்.ஏ.க்களிடம் முதல்வர் கலந்து ஆலோசித்தார். தமிழ்ச்செல்வன் கூறுவதைப் பொருட்படுத்தத் தேவையில்லை.தனிப்பட்ட முறையில் தினகரனை சட்டமன்ற உறுப்பினர்கள் சந்தித்திருப்பர். அதில் அரசியல் இல்லை. கட்சியின் வழிகாட்டும் குழுதான் கட்சியையும் ஆட்சியையும் வழி நடத்துகிறது. இந்த ஆட்சிக்கு எந்தவித அச்சுறுத்தலும் இல்லை’ என்று பேசினார் முடித்துக் கொண்டார்.

தமிழரசியல் முகநூல் பக்கத்திற்குச் செல்ல

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*