கம்யூனிஸ்டு கல்யாண்ம்ணா சும்மாவா?

கம்யூனிஸ்டுகள் என்றால் பொது வாழ்வில் தூய்மையையும், தனி வாழ்வில் எளிமையையும் கடை பிடிப்பவர்கள் என்பது அனைவருக்கும் தெரியும். பெரும்பலான கம்யூனிஸ்டுகளின் வாழ்க்கை இப்படி இருக்கும் நிலையில், கேரளமாநிலத்தைச் சேர்ந்த இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி  பெண் எம்.எல்.ஏ தன் மகளுக்கு கிலோ கணக்கில் தங்கம் போட்டு திருமணம் நடத்தியிருப்பது பெரும் சர்ச்சைகளை உருவாக்கியிருக்கிறது.
குருவாயூரில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கம்யூனிஸ் கட்சியைச் சேர்ந்தவரும் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள நட்டிக்காரா தொகுதி எம்.எல்.ஏ-வுமான பெண் எம்.எல்.ஏ கீதா கோபியின் மகள் திருமணம் நடைபெற்றது.
திருமணத்தை நடத்திக் கொடுக்கும் பொறுப்பு தனியார் நிறுவனம் ஒன்றிடம் வழங்கப்பட்டிருந்த நிலையில் திருமணத்திற்காக பணம் தண்ணீராக கொட்டப்பட்டுள்ளது. திருமணத்திற்கு வந்த கேரள முதல்வர் பினராய் விஜயன், காங்கிரஸ் தலைவர் உம்மன் சாண்டி, உள்ளிட்ட கம்யூனிஸ்ட் தோழர்களே இந்த திருமணத்தைக் கண்டு வியந்து போனார்கள்.
கிலோ கணக்கில் தங்கத்தை போட்டபடி நடக்கவே முடியாமல் மணப்பெண் நின்ற கோலமும், வேட்டி கட்டிய மணமகன் ஜெர்க்காகி பெண்ணை ரசிப்பதா நகையை ரசிப்பதா என்று அல்லாடியதையும் அனைவருமே கண்டனர்.
இந்த திருமணத்தின் படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக எதிர்க்கட்சிகள் கடும் சர்ச்சைகளை கிளப்பத் துவங்கின. ஒரு கம்யூனிஸ்ட் எம்.எல். ஏவின் திருமணத்தில் கிலோ கணக்கில் நகைகளா என்று கொந்தளிக்க இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இப்போது கீதா கோபியிடம் விளக்கம் கேட்டிருக்கிறது.
பொதுவாக எழுந்த விமர்சனங்களுக்கு கீதா கோபி அடித்த கமெண்ட் என்ன தெரியுமா? “கம்யூனிஸ்டுண்ணா சும்மாவா?” என்பதுதான்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*