திருமுருகன் மீது குண்டாஸ்: சிக்கலில் சென்னை கமிஷனர்!

ஈழத்தில் படுகொலைக்கு உள்ளான தமிழர்களுக்கு அஞ்சலி செலுத்தச் சென்ற மே 17 இயக்க நிர்வாகி திருமுருகன் உட்பட நால்வர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.
வழக்கமாக சமூக விரோதிகள் மீது போடப்பட்டும் இச்சட்டத்தை சமீபத்தில் ஆட்சிக்கு வந்த பாஜக அரசு திருத்தியது. புதிய திருத்தங்களின் படி புதிய குற்றங்களில் ஈடுபடுகிறவர்கள் மீதும் இச்சட்டத்தை பிரயோகிக்கலாம் என்கிறது விதி. அந்த விதியை பயன்படுத்தியே திருமுருகன் மீது குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளது.
ஆனால் புதிய குற்றம் என்பதில் அஞ்சலி நிகழ்வுவும், அமைதி வழிப் போராட்டங்களும் இல்லை. திருமுருகன் மீதான குற்றப்பட்டியலில் அவர் கலந்து கொண்ட பல்வேறு போராட்டங்களை பட்டியலிட்டு போலீசார் இந்த வழக்கை போட்டிருக்கிறார்கள்.
இந்நிலையில், திருமுருகன் மீதான குண்டர் சட்டம் தொடர்பாக ஐநா மனித உரிமை ஆணையத்தில் முறையிடப்பட்டுள்ளது. தேசிய மனித உரிமை ஆணையத்திடமும் புகார் மனு அனுப்புவது தொடர்பாக ஆலோசனைகள் நடந்து வரும் நிலையில், திருமுருகன் மீது குண்டர் சட்டம் தொடர்பான ஆணையில் கையெழுத்திட்டிருப்பது சென்னை கமிஷனர் ஏ.கே.விசுவநாதன்.

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் பின்னர் சென்னை முழுக்க நடந்த வன்முறையில்  குடிசைகள் தீவைக்கப்பட்டன, ஆட்டோக்கள் கொளுத்தப்பட்டன, பெண்கள் பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாகினர். ஆனால் இதை எல்லாம் செய்த சமூக விரோதிகளில் ஒருவர்  கூட கைது செய்யப்படாத நிலையில்,  தமிழகம் முழுக்க கொலை, கொள்ளை படுகொலைகள் நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்லும் நிலையில், சென்னையிலும் இதே நிலைதான் வீட்டில் பெண்கள் தனியாக இருக்கவே அச்சப்படும் அளவுக்கு பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலையில் மிக மோசமாக சமூக விரோதிகளை கண்டறிந்து அவர்களை சட்டத்தின் முன்னிறுத்தி தண்டிப்பதை விட்டு விட்டு. அரசியல் ரீதியாக அமைதி வழியில் போராடிய திருமுருகன் மீது சென்னை காவல்துறையின் தலைமைப் பதவியில் இருக்கும் விஸ்நாதனே கையெழுத்திட்டு குண்டர் சட்டம் போடும் அளவுக்கு அவருக்கு இருந்த அரசியல் அழுத்தங்கள் என்ன என்கிற கேள்விகளோடு, குண்டர் சட்டத்தின் உள்ளார்ந்த பொருளோடுதான் திருமுருகன் மீது அச்சட்டம் பிரயோகிக்கப்பட்டுள்ளதா என்பதையும் கேள்வி கேட்கும் விதமாக நீதிமன்றத்தில் வழக்கு தாக்கலாலும் போது நீதிமன்றத்தில் சென்னை கமிஷனர் பதில் கூறும் நிலை ஏற்படலாம்.

தமிழரசியல் முகநூல் பக்கத்திற்குச் செல்ல

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*