கிண்டல் கேள்விக்கு நக்கல் டுவிட் செய்த சுஷ்மா!

 டுவிட்டரில், தன்னை கிண்டலாக கேள்வி கேட்ட நபருக்கு மத்திய  வெளியுறவுத்துறை அமைச்சரான சுஷ்மா சுவராஜ்யும் கிண்டலாக பதிலடி கொடுத்துள்ளார்.

மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் டுவிட்டரில் தீவிரமாக செயல்பட்டுவருகின்றார். இவருடைய தீவிரமான செயல்களின் மூலம் பலர் அமைச்சர் சுஷ்மாவிடம் உதவி கேட்ட வண்ணமுள்ளனர். வெளிநாட்டில் தங்கியிருக்கும் இந்தியர்களும் தங்களின் பிரச்சனைகளை டுவிட்டர் மூலம் அமைச்சரிடம் தெரிவித்து, இந்திய தூதரகம் மூலம் உதவி பெற்றுக் கொண்டிருக்கின்றனர். இதனால், அமைச்சர் சுஷ்மா சுவராஜ்ருக்கு மதிப்பு பெருகிக் கொண்டிருக்கின்றது.

இந்நிலையில், கரன் சைனி என்பவர், சுஷ்மாவின் டுவிட்டர் பக்கத்தில் தான் செவ்வாய் கிரகத்தில் சிக்கிக்கொண்டிருப்பதாகவும், 987 நாட்களுக்கு முன்னர் விண்ணுக்கு அனுப்பப்பட்ட மங்கள்யான் விண்கலத்தில் அனுப்பி வைக்கப்பட்ட உணவு தீர்ந்து வருவதாகவும், இதனை சமாளிப்பதற்காக அடுத்த மங்கள்யான் விண்கலம் எப்போது அனுப்பப்படும் என்றும் கேட்டிருந்தார். இதற்கு பதிலடி கொடுப்பதற்காக சுஷ்மா, செவ்வாய் கிரகத்தில் நீங்கள் பிரச்னையில் சிக்கியிருந்தாலும், அங்குள்ள இந்திய தூதரகம் மூலம் உதவி செய்வோம் என பதிலளித்துள்ளார்.

சுஷ்மாவின் பதிலை சுமார் 3500 பேர் ரீடுவிட் செய்துள்ளனர். 6 ஆயிரம்பேர் லைக் செய்துள்ளனர். சைனியின் டுவிட்டுக்கு பலர் கடும் விமர்சனம் செய்து வருகின்றனர். அமைச்சர் செய்யும் நல்ல செயலை கேலி செய்ய வேண்டாம் என கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*