பாகுபலியை தேவசேனா காதலிக்கவில்லை?

கிசு கிசு எழுவதற்கு திரைத்துறையில் எப்போதும் பஞ்சம் இருக்காது. ஒரு நடிகர், நடிகை இரண்டு படங்களில் ஒன்றாக பணிபுரிந்தாலே அவர்களுக்கு காதல், திருமணம் என கதையை கிளப்பி விடுவார்கள். தெலுங்கில் வெளியான ‘பில்லா’ திரைப்படத்தில் அனுஷ்கா மற்றும் பிரபாஸ் ஜோடி இணைந்து நடித்தார்கள். அதன்பிறகு ‘மிர்ச்சி’, ‘பாகுபலி1’ மற்றும் ‘பாகுபலி2’ ஆகிய படங்களில் பணிபுரிந்திருக்கிறார்கள். பாகுபலி இரண்டாம் பாகத்தில் இவர்களின் ஜோடிப் பொருத்தம் அருமையாக உள்ளது என தமிழ் சினிமா ரசிகர்கள் வெகுவாக பாராட்டினார்கள். இதில் இவர்களின் காதல் காட்சிகளை ரசிகர்கள் பெரிதும் விரும்பினர். இதனால் அனுஷ்காவும் பிரபாஸும் காதலிக்கிறார்கள் என வதந்தி பரவ ஆரம்பித்தது. இதற்கு தற்போது முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் அனுஷ்கா.

இதுகுறித்து அவர், “நானும் பிரபாஸும் நல்ல நண்பர்கள், அவரை நான் காதலிக்கவில்லை. இனியும் இதுபோன்ற வதந்திகளை பரப்ப வேண்டாம்” என்று கூறியுள்ளார்.

 

தமிழரசியல் முகநூல் பக்கத்திற்குச் செல்ல

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*