மெயிலை குட்டை பாவாடையோடு ஒப்பிட்டு சர்ச்சை!

இ-மெயில் குட்டைப் பாவடை போல: கடந்த 2005-ம் ஆண்டிலிருந்து இந்த வரிகள் புத்தகங்களில் அச்சிடப்பட்டு வரும் நிலையில், தற்போது, 2017-ம் ஆண்டு கமலா நேரு கல்லூரியின் 3-ம் வருட மாணவர்கள் இதற்கு எதிராக குரல் கொடுக்கின்றனர்.

டெல்லி பல்கலைக்கழகத்தின் 3-ம் ஆண்டு வர்த்தக மாணவர்கள், தங்கள் பாடநெறியின் ஒரு பகுதியாக, அடிப்படை வணிக தொடர்பாடல் பற்றி படித்து வருகின்றனர். இந்த பாடத்திற்கு பல்கலைக்கழகத்தால் பரிந்துரைக்கப்பட்ட பாடநூல்களே மாணவர்களுக்கு வழங்கப்பட்டுவருகின்றது.

இந்த வணிகத்தொடர்பாடல் புத்தகம்  S. Chand & company மூலம் வெளியிடப்பட்டுள்ள நிலையில், அதில் மின்னஞ்சல் பற்றி வர்த்தக மாணவர்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதால், ‘’மின்னஞ்சல் எடிசெட்ஸ் (Email Etiquettes)’’, என்னும் பகுதியில், ‘’ ஒரு மின்னஞ்சலை எழுதும் போது மனதில் வைத்துக் கொள்ள வேண்டிய அடிப்படை கொள்கைகளை பட்டியலிட்டு கூறியிருக்கின்றது’’.

இதில், ‘’உங்கள் மெயிலை சுருக்கமாக வைத்திருங்கள்’’ என்ற தலைப்பில், SRCC
வர்த்தகத் துறையின் முன்னாள் தலைவரான பேராசிரியர் சி.பி. குப்தா அவர்கள், ‘’ மின்னஞ்சல் தகவல்கள் குட்டைப் பாவடைகள் போல இருக்க வேண்டும்- சிறிதாக இருக்கும் வேளையில் சுவாரஸ்யமாக இருக்க வேண்டும் என்றும், பெரிதாக இருக்கும் வேளையில் முக்கியமான தகவல்களை கொண்டிருக்க வேண்டும் என்று அச்சிடப்பட்டிருந்தது. மேலும், மின்னஞ்சல் தகவல் மிகவும் பெரிதாக இருந்தால் அதைப் படிக்காமல் கூட விட்டுவிடலாம் அல்லது சாதாரணமாக வாசிக்கலாம்’ என இருந்தது.

இந்த வரிகள் கடைசியாக பதிக்கப்பட்ட 2016-ம் ஆண்டு புத்தகத்திலும் இடம்பெற்றுள்ளது. இதற்கு மாணவர்கள், மாணவியர் மத்தியில் பெரும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. தற்போது, 70 வயது கடந்துள்ள புத்தக ஆசிரியர் சி.பி.குப்தா கூறுகையில், ” மக்களின் உணர்வுகளை புண்படுத்தியதற்காக, வருத்தம் தெரிவித்து கொள்கிறேன். இ – மெயில் குறித்து ஒரு வெளிநாட்டு எழுத்தாளரின் கட்டுரையில் கூறப்பட்டு இருந்ததை தான் புத்தகத்தில் மேற்கோள் காட்டி இருந்தேன். அந்த வாசகத்தை நீக்கும்படி, புத்தக பதிப்பாளரிடம் ஏற்கனவே கூறி விட்டேன்,” என்றார்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*