ஆதாருக்கு ஆப்பு வைக்குமா உச்சநீதிமன்றம்!

கடந்த காங்கிரஸ் ஆட்சியில் பிரதமராக இருந்த மன்மோகன்சிங்கால் கொண்டு வரப்பட்ட ஆதார் அட்டையை கடுமையாக எதிர்த்தது அப்போதை பாஜக தலைமை.
ஆனால் அதன் பின்னர் ஆட்சிக்கு வந்த பிரதமர் மோடி அனைத்து துறைகளிலும் ஆதாரை கட்டாயமாக்கினார். ஆடு, மாடு, கோழிகளுக்குக் கூட ஆதார் அவசியம் என்ற உத்தரவு மக்களின் இயல்பு வாழ்க்கையை தொந்தரவு செய்வதாக இருக்கிறது. அரசியல் நூறு ரூபாய் ஊக்கத்தொகை பெறும் முதியவர்கள் கூட ஆதார் இருந்தால் மட்டுமே பெற முடியும் என்ற நிலையில் இதற்கு எதிராக பல வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் தொடுத்த போதெல்லாம் ஆதார் கட்டாயமில்லை.
ஆதாரை கட்டாயமாக பலவந்தமாக அரசுத்துறைகள் கேட்கக் கூடாது என்று உத்தரவிட்டது உச்சநீதிமன்றம். இந்நிலையில் வருமான வரி கணக்கு தாக்கல் செய்யும் போது ஆதார் எண்ணை கண்டிப்பாக குறிப்பிட வேண்டும் என்று சட்டம் கொண்டு வந்தது மத்திய அரசு.
இதே போல பான் கார்டுக்கும் ஆதார் அவசியம் என்ற உத்தரவையும் பிறப்பித்தது அரசு.இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் 3 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
தாக்கல் செய்யப்பட்ட மனுக்களில் “ ஆதார் எண்ணை கட்டாயம் ஆக்குவது இந்திய அரசியல் சட்டத்துக்கு எதிரானது. இந்திய குடிமகன்கள் யாரையும் ஆதார் எண்ணை கண்டிப்பாக தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறுவது ஆதார் சட்ட நடைமுறைக்கு முரணானது. குறிப்பாக ஒழுங்காக வரி செலுத்துபவர்களிடம் வருமான வரி கணக்கு தாக்கல் செய்யும்போது ஆதார் எண்ணை கட்டாயம் ஆக்க நிர்ப்பந்தம் செய்யக்கூடாது என்று குறிப்பிட்டு இருந்தனர்.

 

வழக்கு விசாரணையின் போது போலி பான் கார்டு, போலி ரே‌ஷன் கார்டுகளை நீக்க ஆதார் எண்ணை கட்டாயம் ஆக்குவதுதான் தீர்வா? இது மக்களை ஆதார் கார்டு பெறுவதை வலுக்கட்டாயமாக திணிப்பது போல் அல்லவா இருக்கிறது. கோர்ட்டு உத்தரவையும் மீறி மீண்டும் ஆதாரை கட்டாயம் ஆக்கியது ஏன்? என்று கோர்ட்டு கேள்வி எழுப்பியது. வழக்கு விசாரணை தொடர்ந்த நிலையில் இன்று தீர்ப்பளித்த சுப்ரீம் கோர்ட்டு ‘பான்’ எண்ணுடன் ‘ஆதார்’ எண்ணை இணைக்கும் மத்திய அரசின் உத்தரவுக்கு தடை விதித்தது.

வருமான வரி தாக்கல் செய்வதற்கு ஆதார் எண் கட்டாயம் இல்லை என உத்தரவிட்டு உள்ள சுப்ரீம் கோர்ட்டு, ஆதார் கார்டு எண் கட்டாயம் தனிமனித சுதந்திரத்துக்கு எதிரானதா என்பது குறித்து அரசியல் சாசன அமர்வு விசாரிக்கும் என்றது.
இதுவரை அறிவுறைகளை மட்டுமே கூறி வந்த உச்சநீதிமன்றம் இப்போது அரசுக்கு கட்டுப்பாடுகளை விதிக்கத் துவங்கியுள்ளது.

இந்த செய்தி பிடித்திருந்தால்  தமிழரசியல் முகநூல் பக்கத்தை லைக் பண்ணுங்க

 

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*