தமிழில் சினிமாவில் முதன்முறையாக சாய்பல்லவி

‘கரு’ படத்தின் போஸ்டரை வைத்தே, படத்தின் கதை இதுவாகத்தான் இருக்கும் என ரசிகர்கள் ஊகித்துள்ளனர். ஏ.எல்.விஜய் இயக்கத்தில் சாய் பல்லவி நடிக்கும் படம் ‘கரு’. இதுதான் தமிழில் சாய் பல்லவி நடிக்கும் முதல் படம். இந்தப் படத்தை, லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியானது. அதைப் பார்த்த ரசிகர்கள், இப்படித்தான் கதை இருக்கும் என்று ஊகித்துள்ளனர்.

ஃபர்ஸ்ட் லுக்கில், தாயும், மகளும் கட்டியணைத்து படுத்திருப்பது போலவும், அவர்களைச் சுற்றி பறவையின் கூடு போலவும் உள்ளது. அப்படியானால், தலைப்பை வைத்துப் பார்க்கும்போது, இது தாய் – மகள் உறவு சம்பந்தப்பட்ட கதை என்று புரிகிறது.

மலையாளத்தில் இரண்டு படங்களில் நடித்துள்ளார். தெலுங்கிலும் இப்போதுதான் ஒரு படத்தில் நடித்திருக்கிறார், இன்னொரு படத்தில் கமிட்டாகியிருக்கிறார். தமிழிலும் இதுதான் முதல் படம். எனவே, அதற்குள் அம்மாவாக நடிக்க ஒத்துக்கொண்டது ஆச்சரியப்பட வைப்பதாக உள்ளது.

ஒருவேளை ‘காக்கா முட்டை’ ஐஸ்வர்யா ராஜேஷ் போல் துணிச்சலாக உண்மையிலேயே அம்மாவாக நடித்தாலும் நடிக்கலாம். இல்லையென்றால், அந்தக் குழந்தையைத் தத்தெடுத்து வளர்க்கும் வளர்ப்புத் தாயாகவோ அல்லது தாயை இழந்த தன் தங்கையைத் தாய் போல காக்கும் அக்காவாகவோ நடிக்கலாம் என்று மக்கள் கூறுகின்றனர். எது எப்படியோ சாய் பல்லவியின் துணிச்சலும் படங்களையும் கதாப்பாத்திரங்களை தேர்வு செய்வதில் அவர் காட்டக்கூடிய கவனமும் அவரை சினிமா உலகில் மிகப்பெரிய இடத்திற்கு கொண்டுசெல்லும்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*