திருமுருகனுக்காக இன்று கண்டனக்கூட்டம்!

மே-17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி போரில் கொல்லப்பட்ட ஈழ மக்களுக்கு அஞ்சலி செலுத்திய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட அவர் உட்பட நால்வர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. இது தமிழக இயக்கங்களிடையே அதிர்ச்சியை உருவாக்கியிருக்கும் நிலையில்,
திருமுருகன் கைதை கண்டித்து இன்று மாலை தலைவர்கள், எழுத்தாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் கலந்து கொள்ளும் கண்டனக் கூட்டம் சென்னையில் நடைபெறுகிறது.
தமிழகம் முழுக்க பல்வேறு தரப்பினரும் தங்களின் வாழ்வாதாரப் பிரச்சனைகளுக்காக போராடி வரும் நிலையில் அவர்களை எல்லாம் எச்சரிக்கும் தொனியில் திருமுருகன் மீது குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளது.
ஜல்லிக்கட்டு போராட்டத்தின் பின்னர் தமிழகத்தின் சகல மக்களிடமும் அவர்களை நேரடியாக பாதிக்கும் அனைத்து விதமான பிரச்சனைகளிலும் விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது.
டாஸ்மாக், மணல் கொள்ளை, மீத்தேன் என அனைத்து பிரச்சனைகளுக்காகவும் போராடும் மக்களை மவுனமாக்கவும் அரசியல் தளத்தில் தமிழர்களின், தமிழகத்தின் வாழ்வாதாரப்பிரச்சனைகளை பேசுகிறவர்களை அச்சுறுத்தவுமே திருமுருகன் மீது குண்டர் சட்டம் போட்டப்பட்டுள்ளது. இதை கண்டிக்க வேண்டியது ஜனநாயக சக்திகளின் கடமை.

நாள் – 10-06-2017, மாலை 5 மணி
இடம் : அம்பேத்கர் திடல் ( 100 அடி சாலை, லஷ்மன் ஸ்ருதி அருகில்) கே.கே.நகர்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*