திருமுருகன் மீதான ஒடுக்குமுறை எப்படி புரிந்து கொள்வது?

மே 17 திருமுருகன் காந்திக்காக இன்று கண்டனக் கூட்டம் நடைபெறும் நிலையில் ஏன் இந்த கைது என்பதை புரிந்து கொள்வதும் அதற்காக குரல் கொடுப்பதும்தான் குடிமக்களுக்கு பாதுகாப்பானது.
தமிழகத்தில் ஜனநாயகத்தின் குரல்கள் மக்கள் ஆதரவோடு உயிர்த்தெழுந்த வரலாறு உண்டு. அதை பயன்படுத்தி ஆட்சிக்கு வந்தவர்கள் போராடும் சுதந்திரத்தை சுருக்கியதோடு, அதற்கான பரப்பையும் முடக்கினார்கள்.
சென்னை கடற்கரையில் இருந்த சீரணி அரங்கை அப்புறப்படுத்திய அரசு. சேப்பாக்கத்திலும் போராட அனுமதி கொடுப்பதில்லை. சென்னை அண்ணா சாலையில் ஆள் நடமாட்டமில்லாத கூவக்கரையோரம் போராட்டங்களுக்கு அனுமதி கொடுக்கப்பட்டது. அதன் பின்னர் எந்த போராட்டங்களுக்கும் அனுமதி இல்லை என்பதே பொது விதி ஆகி விட்டது.
மெரீனா கடற்கரையையே கிட்டத்தட்ட தமிழக அரசு மூடி விட்டது. இப்படி ஒவ்வொரு கதவாக எதிர்ப்புணர்வை வெளிப்படுத்தும் கதவுகளை மூடியதன் விளைவாக இன்று தமிழகமே போர்க்களமாக எழுந்து நிற்கிறது.
நெடுவாசல், டாஸ்மாக், மணல் கொள்ளை, தண்ணீர், விவசாயம் என எங்கோ ஓரிடத்தில் தொண்டை காய கத்திக் கொண்டிருக்கிறார்கள் மக்கள்.
இது ஆட்சியாளர்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தும் நிலையில் ஜல்லிக்கட்டு போல சங்கடத்தை ஏற்படுத்தும் கொந்தளிப்புகளுக்கான சாத்தியங்கள் தமிழகத்தில் உள்ளன.
இந்த கொதிப்புகளை அடக்கவே எச்சரிக்கும் தொனியில் திருமுருகன் உடபட நால்வர் மீது குண்டாஸ் சட்டம் போடப்பட்டுள்ளது.
இதை இப்போது கண்டிக்கத் தவறினால் நாளை!

கணடனக்கூட்டம்

நாள் – 10-06-2017, மாலை 5 மணி
இடம் : அம்பேத்கர் திடல் ( 100 அடி சாலை, லஷ்மன் ஸ்ருதி அருகில்) கே.கே.நகர்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*