எங்கும் ஓடவில்லை தினகரன் ஆதரவு 33 ஆனது!

இரட்டை இலைச் சின்னத்திற்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் கைதான தினகரன் ஜாமீனில் வந்ததையடுத்து முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும், பன்னீர்செல்வதிற்கும் தலைவலி அதிகமாகியது.  வெளியில் வந்த அவரை பல எம்.எல்.ஏக்கள் போய் சந்தித்தது அதிமுகவின் இரு அணிகளையும் அதிர்ச்சியில்  ஆழ்த்தியது. அவரை 31 எம்.எல்.ஏக்கள் சந்தித்து ஆதரவளித்த நிலையில் சுமார் 4-=பதுக்கும் மேற்பட்ட  எம்.எல்.ஏக்களின் ஆதரவு அவருக்கு  உள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், நேற்று முதல் தினகரனை காணவில்லை என்ற செய்தி பரவியது. அவர் டெல்லி சென்று விட்டதாகவும், கேரளா சென்று விட்டதாகவும் செய்திகளை சில இணையங்கள் வெளியிட்டன. ஆனால்  சதா நேரமும் ஊடகங்கள் அவரை துரத்திய நிலையில் சில நாட்கள் அமைதியாக  இருக்கலாம் என்று தீர்மானித்தவர் சத்தமின்றி இருந்தார்.  ஊடக வெளிக்குள் அடிபடாத காரணத்தால் அவரை காணவில்லை என்ற செய்திகள் பரவிய நிலையில்,  இரு நாட்களும் தன் ஆதரவு பிரமுகர்களுடன்  அவர் ஆலோசனை நடத்தி வந்தார்.

இந்த ஆலோசனையில்  முன்னாள் அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, பழனியப்பன்  ஆகியோர் பங்கேற்றனர். இந்த நிலையில் ஒட்டப்பிடாரம் தொகுதி எம்.எல்.ஏ. சுந்தர்ராஜ் இன்று தினகரனை சந்தித்து பேசினார். அப்போது அவர் தனது ஆதரவை தெரிவித்தார். இதன் மூலம் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கை 33 ஆக உயர்ந்துள்ளது.

தமிழரசியல் முகநூல் பக்கத்திற்குச் செல்ல

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*