சுஜிலீக்ஸில் இடம்பெறாதது வருத்தம்: அமலா பால்

தமிழ் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது சுஜிலீக்ஸ். பாடகி சுஜித்ரா தனியார் பார் ஒன்றில் தாக்கப்பட்டார். இதற்கு காரணம் நடிகர் தனுஷ் என தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார். அதற்கு அடுத்த நாள் முதலாக சுஜித்ராவின் ட்விட்டர் பக்கத்தில் நடிகர்களின் அந்தரங்க புகைப்படங்களும் வீடியோக்களும் வெளியாகின. இவை அனைத்தும் சுஜிலீக்ஸ் என்ற பெயரில் வெளியானது. இதனால் தனுஷ், த்ரிஷா, சஞ்சிதா ஷெட்டி, ஆண்ட்ரியா, அனிருத், அனுயா மற்றும் ஹன்சிகா உட்பட பலரும் பாதிக்கப்பட்டனர். புகைப்படங்களில் இருப்பது நாங்கள் அல்ல, அது பொய்யான புகைப்படங்கள் என மறுப்பு தெரிவித்தனர். இந்த சுஜிலீக்ஸில் அடுத்ததாக தனுஷ் மற்றும் அமலா பால் லீலைகள் வெளியாகும் என கூறப்பட்டது. இந்நிலையில் சுஜித்ராவின் ட்விட்டர் பக்கம் முடக்கப்பட்டது.

தற்போது அமலா பால் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார். அவர், “சுஜிலீக்ஸில் என்னுடைய வீடியோ வெளியாகும் என சொன்னதும், அப்படி என்னதான் வீடியோ வெளியாக போகிறது என்ற ஆவலோடு இருந்தேன். அதற்குள்ளாக அந்த ட்விட்டர் பக்கம் முடக்கப்பட்டது எனக்கு வருத்தமே” என்று கூறியுள்ளார்.

தமிழரசியல் முகநூல் பக்கத்திற்குச் செல்ல

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*