ம.பி முதல்வரின் உண்ணாவிரத நாடகம்!

வங்கிகளில் வாங்கிய கடன்களை ரத்து செய்யக் கோரி மத்திய பிரதேச மாநில விவசாயிகள் போராடும் நிலையில் 5 விவசாயிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். அதையொட்டி நடக்கும் கிளர்ச்சிகள் 10 நாட்களைக் கடந்து நடைபெறும் நிலையில் மத்திய பிரதேச மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் காலவரையற்ற உண்ணாவிரதத்தை துவங்கியிருக்கிறார்.
இந்த உண்ணாவிரதத்தை பாஜகவினரே நாடகம் என்றுதான் கூறுகிறார்கள். விவசாயிகளின் போராட்டங்களை கொச்சைப்படுத்திய முதல்வர் விவசாயிகள் யோகா செய்ய வேண்டும் என்று அட்வைஸ் வேறு வழங்கியிருந்தனர்.  விவசாயிகளின் போராட்டங்களை முடிவுக்கு கொண்டு வர அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டுமே தவிற மக்களின் கோரிக்கைகளை செயல்படுத்தும் இடத்தில் இருக்கும் முதல்வர்  போபால் தசரா மைதானத்தில் உண்ணாவிரதம் இருப்பது விவசாயிகளுக்கு எதிராக பாஜகவினரை தூண்டும் செயல் என்ற விமர்சனம் எழுந்துள்ளது.
தனியார் ஆங்கில செய்தி சேனலுக்கு அவர் அளித்து உள்ள பேட்டியில், “விவசாயிகளின் குடும்பத்தார் இங்கு வந்தனர், என்னை சந்தித்தனர். அவர்கள் நான் உண்ணாவிரதம் இருக்க வேண்டாம் என கேட்டுக்கொண்டனர். அவர்களுடைய கிராமத்திற்கு வருமாறு எனக்கு அழைப்பு விடுத்து உள்ளனர். எங்களால் செய்ய முடியும் அனைத்து பணிகளையும் அவர்களுக்காக நாங்கள் செய்வோம் என்றோம். அமைதி திரும்பினால், நாளைய நடவடிக்கை தொடர்பாக முடிவு எடுப்போம்,” என்றார். சவுகானது பேச்சு இன்று அவர் உண்ணாவிரத போராட்டத்தை முடித்துக் கொள்ளலாம் என்பதை காட்டுகிறது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*