தலைமை தேர்தல் ஆணையத்தில் தீ விபத்து!

டெல்லியில் அமைந்துள்ள தலைமை தேர்தல் ஆணையத்தில் இன்று தரைதளத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.

புது டெல்லியில் தலைமை தேர்தல் ஆணைய அலுவலகம் செயல்பட்டு வருகிறது. 8 மாடி கொண்ட இக்கட்டிடத்தில் தரை தளத்தில் உள்ள ஒரு அறையில் இன்று மதியம் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. அதனால் தரை தளம் முழுவதும் புகை மண்டலம் ஆனது. உடனே தீயணைப்பு படைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் 4 வாகனங்களில் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். தீயை அணைக்க கடுமையாக போராடினார்கள். தீ விபத்து நடந்த போது தலைமை தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி அலுவலகத்தில் இருந்தார். உடனே அவரை பத்திரமாக வெளியேற்றினர். மேலும் அலுவலர்கள், அதிகாரிகள் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.

சில நாட்களுக்கு முன்பு சென்னை திநகர் சென்னை சில்க்ஸ் கட்டிடத்தில் ஏற்பட்ட தீவிபத்தை யாரும் அவ்வளவு சீக்கிரம் மறந்திருக்க முடியாது. அந்த தீ இரண்டு நாட்களாக தொடர்ந்து எரிந்து 7 மாடி முன்பக்க சுவர் இடிந்து விழுந்தது. இதையடுத்து புதுபேட்டையில் வணிக வளாகத்தில் திடீர் தீவிபத்து ஏற்பட்டது. அதைதொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜெனரேட்டர் அறையில் திடீர் தீவிபத்து ஏற்பட்டது.குறிப்பிடத்தக்கது.

தமிழரசியல் முகநூல் பக்கத்திற்குச் செல்ல

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*