21-ஆம் தேதி சசி ஆஜராக உத்தரவு!

அந்நிய செலாவணி வழக்கில் அதிமுக அம்மா அணியின்  துணை பொதுச்செயலாளர் சசிகலா வரும் 21-ஆம் தேதி வீடியோ கான்ஃப்ரன்ஸ் மூலம் ஆஜராக எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 1996-ஆம் ஆண்டு சசிகலா, தினகரன் ஆகியோர் மீது அந்நிய செலாவணி மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கிலிருந்து தங்களை விடுவிக்கக் கோரி தினகரன், சசிகலா உள்ளிட்டோர் எழும்பூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். கடந்த 2015-ஆம் ஆண்டு இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் இவ்வழக்கிலிருந்து சசிகலா மற்றும் தினகரனை வழக்கிலிருந்து விடுவித்து உத்தரவிட்டது. ஆனால் இந்த தீர்ப்பை எதிர்த்து அமலாக்கத் துறையினர் உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம் அந்நிய செலாவணி மோசடி வழக்கில் இருந்து சசிகலா, தினகரன் உள்ளிட்டோர் விடுவிக்கப்பட்டதை ரத்து செய்தும், எழும்பூர் நீதிமன்றம் வழக்கு விசாரணையை தொடர்ந்து நடத்தவும் உத்தரவிட்டது. இதனையடுத்து. சென்னை எழும்பூரில் உள்ள பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இதனிடையே, தான் சிறையில் இருப்பதால் வழக்கில் நேரில் ஆஜராக இயலாது என்றும், காணொலி காட்சி மூலம் விசாரணை நடத்த வேண்டுமென்றும் சசிகலா வைத்த கோரிக்கையை எழும்பூர் நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. மேலும் அந்நிய செலாவணி வழக்கில் அமலாக்கத் துறையினரின் கேள்விகளை முன்கூட்டியே தெரிவிக்கக்கோரி சசிகலா எழும்பூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால் கேள்விகளை முன்கூட்டியே வழங்குவது நீதிமன்ற நடைமுறையில் இல்லை அந்த மனுவை தள்ளுபடி செய்தது.

இந்நிலையில், அந்நிய செலாவணி வழக்கில் சசிகலா வரும் 21-ஆம் தேதி வீடியோ கான்ஃப்ரன்ஸ் மூலம் ஆஜராக வேண்டுமென்று சென்னை எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழரசியல் முகநூல் பக்கத்திற்குச் செல்ல

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*