சத்தியமூர்த்தி பவன் மோதல் : இரண்டு நிர்வாகிகள் நீக்கம்!

சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்ற மோதலுக்கு காரணமாக கூறப்பட்ட கௌரி கோபால் மற்றும் முகம்மது சையத் கியாஸ் உல்ஹக் ஆகிய இரண்டு பேரை தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் திருநாவுக்கரசர் தற்காலிகமாக நீக்கியுள்ளார்.

காங்கிரஸ் அலுவலகம் சத்தியமூர்த்தி பவனில், மகளிரணி நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் கடந்த வாரம் நடைபெற்றது. அப்போது, மகளிரணி நிர்வாகிகளுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதம் கைகலப்பில் முடிந்தது. ஒருவருக்கொருவர் பலமாகத் தாக்கிக்கொண்டதோடு, தகாத வார்த்தையில் திட்டிக்கொண்டனர். மகளிரணியினருடன் வந்தவர்களும் தாக்குதலில் ஈடுபட்டதால், அந்த இடமே போர்க்களமானது. தகவலறிந்து மூத்த நிர்வாகிகள்,சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மகளிரணி நிர்வாகிகளைச் சமாதானப்படுத்தி அனுப்பிவைத்தனர். முக்கியமாக, கௌரி கோபால் மற்றும் முகம்மது சையத் கியாஸ் உல்ஹக் ஆகிய இரண்டு பேர்தான் தாக்குதலுக்குக் காரணம் என்று கூறப்பட்டது.

இந்நிலையில், அவர்கள் இரண்டு பேரையும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்புகளிலிருந்து தற்காலிகமாக நீக்கி, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் திருநாவுக்கரசர் அறிவித்துள்ளார். அவர்களுடன் யாரும் தொடர்பு வைத்துக் கொள்ளக்கூடாது என்றும் அவர் கூறியுள்ளார். அவர்களில் முகம்மது சையத், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது. கௌரி, திருவள்ளூர் மாவட்ட மகிளா காங்கிரஸின் முன்னாள் தலைவராவார்.

தமிழரசியல் முகநூல் பக்கத்திற்குச் செல்ல

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*