தமிழ் சினிமாவில் தடம்பதிக்க விரும்பும் துல்கர் சல்மான்

‘வாயை மூடி பேசவும்’, ‘ஓ காதல் கண்மணி’ ஆகிய தமிழ் படங்களில் நாயகனாக நடித்திருப்பவர் துல்கர் சல்மான். இதனையடுத்து இவர் தமிழ் படங்களில் நாயகனாக நடிக்க கதைகள் கேட்டு வந்தார். தற்போது புதிதாக தமிழ் படம் ஒன்றில் ஒப்பந்தமாகியுள்ளார் துல்கர் சல்மான். அறிமுக இயக்குநர் ரா.கார்த்திக் இயக்கவுள்ள இப்படம் தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய இருமொழிகளில் உருவாகவுள்ளது. இந்த படத்திற்கு பெயர் சூட்டபடவில்லை.

இப்படத்தை கெனன்யா பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இந்த படத்திற்கு ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்யகிறார். தீனதயாள் இசையமைக்கவுள்ளார். இப்படத்தின் முதற்கட்ட பணிகள் விரைவில் தொடங்கவுள்ளது. மலையாளத்தில் தொடர்ந்து பட வாய்ப்புகள் அமைந்தாலும், தமிழ் சினிமாவில் தனக்கென ஓர் இடத்தை பிடிக்க நினைக்கிறார் துல்கர். எனினும் நிவின் பாலி அளவுக்கு துல்கருக்கு இங்கே ரசிகர்கள் இல்லை.

தமிழரசியல் முகநூல் பக்கத்திற்குச் செல்ல

 

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*