80 வயது முதிய இந்துப் பெண்ணின் கையை உடைத்த பாஜக போலீஸ்!

இந்து மத உணர்வுகளையும், ஆன்மீகத்தையும் அரசியலோடு கலந்து மக்களை எளிதில் வென்று விடும் அமைப்பாக பாஜக உள்ளது. 2014 ஆம் ஆண்டு மத்தியில் ஆட்சியமைத்த பாஜக இன்று 13 மாநிலங்களில் ஆளும் கட்சியாக உள்ளது. தேர்தல் வெற்றிக்கு இந்து உணர்வுகளையே பயன்படுத்தும் பாஜக மீது அது வென்ற மாநில மக்களே இப்போது அதிருப்தியில் உள்ளார்கள்.

மகாராஷ்டிரம், மத்தியபிரதேசம் போன்ற மாநிலங்களில் வெடித்த  விவசாய போராட்டங்களை அது ஒடுக்கிய விதம் இந்துக்களிடம் மிகப்பெரிய அதிருப்தியை உருவாக்கியிருக்கிறது.  போபாலில் இருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் பாண்டாகாலா என்ற கிராமத்தில் வசிக்கும் 80 வயது முதிய இந்து பெண்ணான கமலாபாய் மேவாட்டேவின் கையை உடைத்து நொறுக்கியிருக்கிறது மத்திய பிரதேச பாஜக காவல்துறை.

தன் கணவர், மகன்கள் பேரன்களுடன் வாழும் மேவாட்டே விவசாயிகள் கடன் தள்ளுபடி கோரி போராடிய நாட்களில் வீட்டில்  இருந்தார். அவரது  வீட்டின் அருகே  நடந்த போராட்டத்தின் போது ஆர்ப்பாட்டக் காரர்கள் மீது போலீசார் தடியடி நடத்த அவர்கள் கலைந்து ஓடினார்கள். அப்படி  ஓடியவர்கள் கமலாபாய் மேவாடேயின்  வீட்டிற்குள் ஓடி வந்தார்கள். பின்னர் வந்தவர்களும் போய் விட தாமதமாக வந்த போலீசார்  வீட்டிற்குள்  நுழைந்து போலீசாரை தாக்கியவர்களை ஒழித்து வைத்திருக்கின்றீர்களா? என்று கேட்டு அந்த குடும்பத்தை தாக்கத் துவங்கினார்கள்.

தங்களுக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று சொல்லியும் கேட்காமல் தொடர்ந்து தாக்கியதில்  அவரது கணவரின் காலில் காயம் ஏற்பட்டது. அந்த பெண்ணின் கை எலும்பு  முறிக்கப்பட்டது. மிக முக்கியமான வன்முறையை தூண்டியதாகவும், வன்முறையாளர்களை பாதுகாத்ததாகவும்  வழக்கும் பதியப்பட்டுள்ளது.

இப்போது உதை வாங்கிக் கொண்டிருக்கும் மக்களின் மோடி போதை கொஞ்சம் கொஞ்சமாக தெளியத் துவங்குகிறது.

 

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*