சமூக வலைத்தளங்களில் வதந்தி பரப்பும் பாஜக தலைவர்கள்!

இன்றைய சூழலில் பெரும்பான்மையான மக்களிடம் ஒரு செய்தியை விரைவாக கொண்டு சேர்க்கும் காரணியாக சமூக வலைதளங்கள் செயல்பட்டு வருகின்றன. இதனால் ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் அதன் உறுப்பினர்களும் தங்களுக்கென சமூக வலைதளங்களில் அதிகாரப்பூர்வமான பக்கங்களை உருவாக்கி தங்கள் செய்திகளை மக்களிடம் பகிர்ந்து கொள்கின்றனர். ஆனால் தங்கள் கட்சியை முன்னேற்றவும், அதற்கு இடையூறாக இருக்கும் நபர்களை தாக்கி பதிவிடவும் மட்டுமே பாஜக உறுப்பினர்கள் சமூக வலைதளங்களை அதிகமாக பயன்படுத்துகிறார்கள். பாஜக உறுப்பினர்கள் சமூக வலைதளங்களில் பகிரும் பாதி செய்திகள் போலியானவை என நிரூபிக்கப்பட்டுள்ளது.

பாஜக பேச்சாளர் சம்பிட் பத்ரா, போலியான புகைப்படங்களையும் தகவல்களையும் பரப்புவதில் வல்லவராக திகழ்கிறார். புகழ்பெற்ற ஐவோ ஜிமா போரில் அமெரிக்கர்கள் வென்று கொடியேற்றிய புகைப்படத்தை இந்திய இராணுவத்தினர் என மார்பிங் செய்யப்பட்ட புகைப்படத்தை வெளியிட்டார். அதேபோல் ஜேஎன்யூ மாணவர் கன்னயா குமார் பங்கேற்ற வீடியோ ஒன்றை மாற்றி வெளியிட்டது என ஏராளமான சர்ச்சைகளுக்கு காரணமாக இருந்திருக்கிறார்.

பாஜக பேச்சாளரான சம்பிட் பத்ரா, சில தினங்களுக்கு முன் என்டிடிவி (NDTV) நடத்திய விவாதம் ஒன்றில் கலந்துகொண்டார். இதில், இறைச்சிக்காக மாடுகள் விற்க பாஜக அரசாங்கம் தடைவிதித்தது பற்றிய விவாதம் நடந்தது. அப்போது இவர், என்டிடிவி பாஜக-வை எதிர்க்கும் கொள்கை கொண்ட தொலைக்காட்சி நிறுவனம் என்று பேசினார். இதனால் என்டிடிவி தொகுப்பாளர் நிதி ரஸ்டன், இந்த முறையற்ற பேச்சுக்கு மன்னிப்பு கேட்காவிட்டால், சம்பிட் பத்ராவை விவாத நிகழ்ச்சியை விட்டு வெளியேறும்படி கூறினார். இதனால் என்டிடிவி-ஐ தவறாக சித்தரிக்கும் முயற்சியில் சம்பிட் பத்ரா ஆர்வமாக இருக்கிறார்.

‘டைம்ஸ் ஆஃப் இஸ்லாமாபாத்’ என்ற பாகிஸ்தான் வலைதளம், பிரதமர் நரேந்திர மோடியின் ‘மேக் இன் இந்தியா’ (Make in india) திட்டம் தோல்வியடைந்தது என ஒரு கட்டுரையை வெளியிட்டு என்டிடிவி-க்கு நன்றி தெரிவித்துள்ளனர். இந்த கட்டுரையை ஷேர் செய்து என்டிடிவி நிறுவனத்தை பாஜக எதிர்ப்பாளர்கள் என உறுதி செய்ய நினைத்தார். ஆனால் அந்த கட்டுரை, ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ (Indian Express) பத்திரிகைக்காக முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் எழுதியது. ஜுன் 11, 2017 அன்று வெளியான இந்த கட்டுரையை ‘டைம்ஸ் ஆஃப் இஸ்லாமாபாத்’ ஷேர் செய்து, தவறாக என்டிடிவி நிறுவனத்தை குறிப்பிட்டுள்ளனர். இதுகுறித்து என்டிடிவி நிறுவனம் கேள்வி எழுப்பியதும், அதனை பாகிஸ்தான் வலைதளம் மாற்றிவிட்டனர். சம்பிட் பத்ரா இதுபோன்று பாஜக-வுக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் பல்வேறு
பொய்யான தகவல்களை பரப்பி வருகிறார்.

அருந்ததி ராயை இந்திய இராணுவம் மனித கேடயமாக பயன்படுத்த வேண்டும் என பாஜக எம்பி பரேஷ் ரவால் ஒரு சர்ச்சையான கருத்தை ட்விட்டரில் பதிவிட்டார். பின்னர் அந்த ட்விட்டை அழிக்கும்படி ட்விட்டர் நிறுவனம் வலியுறுத்தியதனால் அதை அழித்தார். இந்த செய்தியும் ‘டைம்ஸ் ஆஃப் இஸ்லாமாபாத்’ வலைதளத்தால் பகிரப்பட்டது. ஆனால் இதில் அருந்ததி ராய் இதுவரை காஷ்மீர் சென்றதில்லை என பதிவு செய்யப்பட்டிருந்தது. எப்படி இதுபோன்ற பொய்யான செய்திகளை பாகிஸ்தான் வலைதளம் தொடர்ந்து பரப்புகிறது என ‘The Wire’ செய்தித்தளம் விசாரித்ததில், இந்துத்துவா கொள்கைகளுக்கு ஆதரவாக இந்தியாவில் இயங்கும் வலைதளங்களின் வாயிலாக இந்த செய்திகள் வெளியாகியிருக்கின்றன. மோடியின் பாஜக அரசாங்கம் காஷ்மீரில் நிலவும் சூழலை எவ்வளவு மோசமாக கையாள்கிறது என யாரும் அறியாத வண்ணம் இந்த செய்திகளை அவர்கள் பரப்பி வருகின்றனர். அதன் உண்மைத்தன்மையை வெளியில் கூறும் தேசியவாதிகளை
இந்துத்துவா வலைதளங்கள் தவறாக சித்தரிக்கின்றது.

2016 ஆம் ஆண்டு என்டிடிவி நிறுவனம் நடத்திய விவாதத்தில், இராணுவ வீரர்களின் வெற்றி என பொய்யான ஐவோ ஜிமா புகைப்படத்தை காட்டினார் சம்பிட் பத்ரா.

ஜேஎன்யூ மாணவர்கள் தலைவர் கன்னயா குமார் விசயத்திலும் இதேபோன்று போலி வீடியோ ஒன்றை வெளியிட்டார் பத்ரா. கன்னயா குமார் காஷ்மீர் விடுதலைக்காக கோஷமிடுவது போல் சித்தரிக்கப்பட்ட அந்த வீடியோவை ‘டைம்ஸ் நவ்’ தொலைக்காட்சி வெளியிட்டது. இதற்கு அர்னாப் கோஸ்வாமி மறுப்பு தெரிவித்து, இதுபற்றி எழுதிய The Wire செய்தித்தளத்தின் மீது குற்றம் சாட்டினார். பின்னர் ‘டைம்ஸ் நவ்’ நிறுவனம் அந்த வீடியோ வெளியிட்டதை ஏற்றுக்கொண்டனர்.

சம்பிட் பத்ரா மட்டுமல்ல பாஜக ஆதரவாளர்கள் பலரும் இதுபோன்று போலியான செய்திகளை பரப்பி வருகின்றனர்.

இந்துத்துவா கொள்கை சார்ந்து இயங்கும் பத்திரிகையாளர் சுவாமிநாதன் குருமூர்த்தியும் இதுபோன்ற போலியான தகவல் ஒன்றை பரப்பினார். துக்ளக் பத்திரிகையின் ஆசிரியராக செயல்பட்டு வரும் குருமூர்த்தி, பாஜக அரசாங்கத்தின் மாட்டிறைச்சி தடைக்கு ஆதரவு அளிக்கும் வகையில் ஏ.ஆர்.ரஹ்மான் மாட்டிறைச்சி உண்ண மாட்டேன் என கூறியது போன்ற புகைப்படத்தை தனது ட்விட்டர் தளத்தில் பதிவிட்டார்.

இதில், “ நான் மாட்டுக்கறி சாப்பிடுவதில்லை. எனது அம்மா இந்து மத நம்பிக்கையை பின்பற்றி வந்தார். அவர் ஆன்மீக சிந்தனையுடன் இருந்தார். திருவிழாக்களின் போது எனது அம்மா பசு மாடுகளை வணங்குவதை சிறுவயதிலேயே கண்டிருக்கிறேன். நான் சூபியிசத்தை தேர்ந்தெடுத்த பின்னரும் பசுக்கள் புனிதமான வாழ்க்கையின் குறியீடாக இருப்பதை நம்புகிறேன். மாடுகளை கொல்வது கோடிக்கணக்கான இந்துக்களின் நம்பிக்கையை காயப்படுத்துவதாக இருக்கும். எனவே மாடுகளை கொல்வதை நாம் நிறுத்த வேண்டும். இறைச்சிக்காக மாடுகளை கொல்லக்கூடாது என்ற மத்திய அரசின் முடிவை நான் வரவேற்கிறேன்” என்று கூறப்பட்டிருந்தது.

குருமூர்த்தியின் ட்விட்டர் பக்கத்தை 1,260,000-க்கும் அதிகாமானோர் பின்தொடர்கின்றனர். ஒரு பத்திரிகையாளராக இருந்து கொண்டு இந்துத்துவா கொள்கைக்கு ஆதரவாக பொய்யான செய்தியை பகிர்ந்திருக்கிறார். இந்த ட்விட்டை 2,500-க்கும் அதிகமானோர் ரீ-ட்விட் செய்துள்ளனர். இது பொய்யான பதிவு என்று கூட தெரியாமல், வர்த்தகம் மற்றும் தொழிற்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் இதனை ரீ-ட்விட் செய்திருக்கிறார். இந்த தகவல் முற்றிலும் பொய் என்று SM Hoaxslayer இணையதளம் தெரிவித்துள்ளது. சமூக வலைதளங்களில் வரும் பொய்யான தகவல்களை இந்த இணையதளம் ஆதாரத்துடன் நிரூபிக்கும் பணியை தொடர்ந்து செய்துவருகின்றது. இந்த விசயத்தை அறிந்த பின்னர், நிர்மலா சீதாராமன் தனது ரீ-ட்விட்டை அகற்றிவிட்டார்.

இந்த மூன்றாண்டு ஆட்சி காலத்தில் மோடி அரசாங்கம் செய்த சாதனைகளில் முக்கியமானதாக பொய் தகவல்களை பரப்பியதை சொல்லலாம். அந்த அளவுக்கு அதிகமான பொய் தகவல்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர்.

நன்றி: The Wire

தமிழரசியல் முகநூல் பக்கத்திற்குச் செல்ல

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*