மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கு: ஜுன் 19ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

1993 மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. 1993 ஆம் ஆண்டில் 12 இடங்களில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் 713 பேர் படுகாயம் அடைந்தனர்,  257 பேர் கொல்லப்பட்டனர். உலகிலேயே பெரிய தீவிரவாத தாக்குதலாக இந்த நிகழ்வு கருதப்படுகிறது. இரண்டாம் உலகப் போருக்கு பின்னர் ஆர்டிஎக்ஸ் பயன்படுத்தி நடத்தப்பட்ட தாக்குதல் இதுதான். இது சம்பந்தமாக முஸ்தபா தோஸா, அபு சலீம், பிரோஸ் கான், கரிமுல்லா கான், தாகிர் மெர்ச்சண்ட், ரியாஸ் சித்திக் மற்றும் அப்துல் கயாம் ஆகிய 7 நபர்கள், 2003 முதல் 2010 ஆண்டுக்குள் கைது செய்யப்பட்டனர்.

தேசத்துக்கு எதிராக போர் தொடுக்க முயன்ற வழக்கு இவர்கள் மீது தொடுக்கப்பட்டது. இந்த வழக்கின் மீதான விசாரணை இன்று தடா நீதிமன்றத்தில் நடைபெற்றது. இதில் அப்துல் கயாம் மீதுள்ள குற்றத்தை நிரூப்பிக்க தவறியதாக கூறப்படுகிறது. தடா நீதிமன்றம், இந்த வழக்கை வருகிற ஜுன் 19ஆம் தேதிக்கு ஒத்தி வைத்திருக்கிறது.

தமிழரசியல் முகநூல் பக்கத்திற்குச் செல்ல

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*