எம்.டி. எம்.எஸ் மருத்துவ மாணவர் சேர்க்கை ரத்து : உயர் நீதிமன்றம்!

தமிழ்நாட்டில் எம்.டி., எம்.எஸ்., மாணவர் சேர்க்கையை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

எம்.டி., எம்.எஸ் படிப்புகளுக்கு 2 வாரங்களுக்கு முன்னர் மாணவர் சேர்க்கையை தமிழக அரசு நடத்தியது. இதில் 1066 இடங்களில் 999 இடங்கள் அரசு டாக்டர்களுக்கு ஒதுக்கப்பட்டது. மேலும், அரசு டாக்டர்களுக்கு ஊக்க மதிப்பெண்களும் வழங்கப்பட்டன. இதனை எதிர்த்து தனியார் டாக்டர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.இந்த வழக்கினை நேற்று விசாரித்த நீதிமன்றம் கிராமப்புற மாணவர்களுக்கு முதுநிலை மருத்துவ சேர்க்கையில் கூடுதல் மதிப்பெண்கள் வழங்குவது தொடர்பான அரசானையை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. இதன் காரணமாக குறிப்பிட்ட அரசாணையை பின்பற்றி கடந்த மாதம் நடந்த எம்.டி மற்றும் எம்.எஸ் படிப்புக்கான மூன்று கலந்தாய்வு பட்டியல்களையும் நீதிமன்றம் ரத்து செய்து விட்டது. மேலும் புதிய தரவரிசைப் பட்டியல் ஒன்றை மூன்று நாட்களுக்குள் தயாரித்து, அதன் அடிப்படையில் புதிதாக கலந்தாய்வு நடத்துமாறும் தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

உயர் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு குறித்து சுகாதரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறுகையில்,. வழக்கமாக பின்பற்றப்படும் நடைமுறையைத்தான் தமிழக அரசு பின்பற்றுவதாகவும், உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் என்றும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

தமிழரசியல் முகநூல் பக்கத்திற்குச் செல்ல

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*