சீனாவுக்குச் சென்று தற்காப்புக் கலைகளை பயிலும் எமி ஜாக்சன்

பிரிட்டிஷ் இயக்குனர் ஆண்ட்ரூ மோர்கன் இயக்கும் ஹாலிவுட் படத்தில் கமிட்டாகியிருக்கிறார் எமி ஜாக்சன். ஆங்கிலத்தில் தயாராகும் இந்தப் படம், முழுக்க முழுக்க ஆக்‌ஷன் படமாக உருவாக இருக்கிறது. இந்தப் படத்தில் நடிக்க கேட்டபோது, எந்தவித தயக்கமும் இல்லாமல் உடனே ஒப்புக் கொண்டாராம் எமி. காரணம், ஆக்‌ஷன் படத்தில் நடிப்பதுதான் அவருடைய கனவாகவும் இருந்துள்ளது.

அத்துடன், இந்தப் படத்தில் ஹீரோ இல்லாமல், சோலோ லீடாகவும் நடிக்கிறார். இந்த வருட இறுதியில் ஷூட்டிங் தொடங்கும் நிலையில், மூன்று மாதங்கள் கடுமையான பயிற்சியில் ஈடுபடுகிறார் எமி ஜாக்சன். இதற்கான சீனா சென்று, அங்கு தற்காப்புக் கலைகளைப் பயின்று வருகிறார். இந்தப் படத்தின் பெரும்பாலான காட்சிகள், சீனாவில் தான் எடுக்கப்பட இருக்கின்றன.

தமிழரசியல் முகநூல் பக்கத்திற்குச் செல்ல

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*