சென்னை சில்க்ஸ் கட்டிடம் இடிந்து விழுந்ததால் பொதுமக்கள் அச்சம்

தீப்பிடித்து எரிந்து இடிந்து விழும் தருவாயிலிருந்த சென்னை சில்க்ஸ் கட்டடத்தின் ஒரு பகுதி இன்று இடிந்து விழுந்ததால் பரபரப்பு எற்பட்டது. ஆனால், கட்டடத்தின் அந்தப்பகுதியைத் தாங்கள்தான் இடித்தோம் எனக் கட்டட இடிப்பு ஒப்பந்தக்காரர் பீர் முகமது பேட்டியளித்துள்ளார்.

சென்னையின் மிக முக்கியமான பகுதியான தி நகரின் முக்கியமான சாலைகள் உள்ள இடத்தில் இந்த கட்டிடம் அமைந்துள்ளதால், கட்டடம் தீப்பிடித்ததிலிருந்து அப்பகுதியில் மாற்றுவழிகள் உண்டாக்கப்பட்டு போலீசாரால் கட்டிடம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும் முக்கியமான தி நகர் மேம்பாலம் மூடப்பட்டுள்ளதால் போக்குவரத்து பெருமளவில் பாதிக்கப்பட்டு வருகிறது.

சென்னை, தி.நகரில் மே 31 ஆம் தேதி, ஏற்பட்ட பெரும் தீவிபத்தால் சென்னை சில்க்ஸ் கட்டடம் முழுமையாகச் சேதமடைந்தது. இதனால் வலுவிழந்த அக்கட்டடம் இடிக்கப்பட்டு வருகிறது. கடந்த வாரம் கட்டிடத்தை இடிக்கும் பனியின் பொழுது ஊழியர் ஒருவர் பலியானதால், கட்டட இடிப்புப் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இன்று காலை கட்டடம் இடிக்கும் பணி மீண்டும் துவங்கியது.

கட்டட இடிப்புப் பணிகள், ‘ஜா கட்டர்’ எனும் இயந்திரத்தின் உதவியோடு மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந்த நிலையில், சென்னை சில்க்ஸ் கட்டடத்தின் ஒருபகுதி திடீரென இடிந்து விழுந்தது. இதனால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சுற்றிலும் புகை மண்டலம் சூழ்ந்தது. சுற்றுவட்டாரத்தில் இருந்த பொதுமக்கள் பீதியடைந்தனர். இது குறித்து, கட்டட இடிப்பு ஒப்பந்தக்காரர் பீர் முகமது பேசுகையில், ‘கட்டடத்தின் ஒரு பகுதி இடிந்து விழவில்லை. எங்களின் திட்ட மேற்பார்வையின்படியே இது இடிக்கப்பட்டது. இதனால் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. எந்தத் தொழிலாளருக்கும் காயமில்லை. ஒரேயொரு இயந்திரம் மட்டுமே உள்ளே செயல்பட்டது. மிச்சமிருக்கும் மற்றொரு பாதி கட்டடத்தையும் இன்று மாலைக்குள் இடித்து விடுவோம். இடிபாடுகளை அள்ளுவதற்கு 100 லாரிகள் தயாராகவுள்ளன’, என தெரிவித்துள்ளார்.

தமிழரசியல் முகநூல் பக்கத்திற்குச் செல்ல

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*