புத்திசாலிப் பெண்கள் – மக்கு பையன்கள் : ஆய்வு முடிவு!

திருமண உறவு நீடிக்க வேண்டுமானால், ஆண்கள் தங்களை விட அழகாக இருக்கும் பெண்களை அதுவும் அவர்களை விட சிறிது வயது குறைவான பெண்களை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என புதிய ஆய்வுத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

திருமணம் செய்து கொண்டவர்கள் மற்றும் தீவிரமாக காதல் செய்து வரும் சுமார் 1000 ஜோடிகளிடம் கடந்த 5 ஆண்டுகளாக ஆய்வு நடத்தப்பட்டு 5 ஆண்டுகளின் முடிவில் எந்த ஜோடி நிலைத்து நிற்கின்றது என்று கண்டறியப்பட்டுள்ளது. ஆய்வுகளின் முடிவில், பெண்கள் கடந்த காலத்தில் விவாகரத்து செய்திருக்கக்கூடாது, ஆண்களை விட 5 வயது குறைவாக இருக்க வேண்டும் அத்துடன் ஆண்களை விட பெண் படிப்பறிவில் அதிக தகுதி பெற்றிருக்க வேண்டும் என்ற கருத்துக்கள் ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஆண்கள் மற்றும் பெண்கள் தங்களின் வாழ்க்​​கைத் துணைகளை ‘’காதல், உடல் ஈர்ப்பு, சுவை, நம்பிக்கை மற்றும் மனோபாவங்கள் மற்றும் மதிக்கப்பட்ட உணர்வுகள் ஆகியவற்றின் அடிப்படையில்” தேர்ந்தெடுக்கின்றனர் என்று ஐரோப்பியப் ஆபரேஷனல் ரிசர்ச் பத்திரிக்கையில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.​ வயது, கல்வி மற்றும் கலாச்சாரம் ஆகிய சில புறநிலைக் காரணிகளைக் தவிர்த்தால் விவாகரத்து செய்து கொள்வதைத் தவிர்க்கலாம் எனவும் அதில் தெரிவி​​க்கப்பட்டுள்ளது.

இந்த ஆய்வுக்காக இரண்டு பிரபல​​ங்கள் முன்வந்துள்ளனர். அதில் முதலாவதாக 33 வயதுடைய பாப் நட்சத்திரமான Beyoncé Knowles அவரது கணவர் rap mogul Jay-Z என்பவருடன் வாழ்ந்து வருகின்றார். கணவர் அவரை விட 11 வயது பெரியவர். அத்துடன், Beyoncé கணவரை விட மிக​ ​அதிகமாக டிப்லோமா படித்துள்ளார்.

அடுத்து, 70 வயதான மைக்கேல் டக்ளஸ், அவரது மனைவி கேத்தரின் ஜீட்டா-ஜோன்ஸ் என்பவரைக் காட்டிலும் 45 வயது பெரியவர். இவர்கள் இருவரும் முன்னதாக விவாகரத்து செய்து கொண்டுள்ளார்கள். இந்த ஆய்வை மேற்கொண்ட பாத் பல்கலைக்கழகத்தின் ஆய்வாளர்கள் இந்த ஆய்வின் மூலம் விவாகரத்துக்களைக் குறைத்துள்ளனர்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*