ரஜினி எதிர்பார்த்த ‘போர்’: அய்யாக்கண்ணு- ரஜினி சந்திப்பு

தேசிய வங்கிகளில் வாங்கிய விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும்; காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று தொடர்ந்து குரல் கொடுத்து வருபவர் அய்யாக்கண்ணு. இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி சென்று தொடர் போராட்டத்தையும் நடத்தினார். ஆனால் அந்த போராட்டம் பலனளிக்கவில்லை.

இந்நிலையில் இந்திய நதிகளை இணைக்க பிரதமர் மோடியிடம் நடிகர் ரஜினிகாந்த் வலியுறுத்த வேண்டும் என்று தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு கோரியுள்ளார். இது சம்பந்தமாக 16 விவசாயிகள் இன்று ரஜினியை அவரது போயஸ் தோட்ட இல்லத்தில் சந்தித்துள்ளனர். ரஜினிகாந்த், நதிகள் இணைப்பு திட்டத்துக்கு ஒரு கோடி தருவதாக முன்பே கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதுபற்றி அய்யாக்கண்ணு, “ரஜினிகாந்த் இந்த விசயத்தில் நிச்சயம் உதவுவேன் என கூறினார்” என்று தெரிவித்துள்ளார். ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து விமர்சனங்கள் எழுந்துவரும் வேளையில் அவர் பிரதமர் மோடியை சந்தித்து இதுபற்றி பேசுவது சந்தேகம்தான். பாஜக அரசாங்கம் ரஜினியை தன் பக்கம் இழுக்க முயற்சி செய்து வருகிறது. அய்யாக்கண்ணு- ரஜினியின் சந்திப்பு, அவரை நடிகர் என்ற வட்டத்தை தாண்டி மக்களை சிந்திக்க வைக்கும் விதமாக அமைந்திருக்கிறது. ரஜினி எதிர்பார்த்த ‘போர்’ வெகு விரையில் வருவதற்கான வாய்ப்புள்ளது.

தமிழரசியல் முகநூல் பக்கத்திற்குச் செல்ல

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*