4 வருடங்களுக்குப் பிறகு துவங்கியது விஸ்வரூபம்-2 படப்பிடிப்பு

2013ல் கமல்ஹாசன் நடிப்பிலும் இயக்கத்திலும் வெளியான விஸ்வரூபம் படம் விமர்சனத்துக்குள்ளானது மட்டுமன்றி பல அரசியல் பிரச்னைகளுக்குப் பிறகே தமிழகத்தில் வெளியானது. இதனால் கமல் வேறு நாட்டிற்கு சென்றுவிடுவதாக அறிவித்தார். இது பெரும் சர்ச்சைக்குள்ளானது.

இதனைத் தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகம் 2013 கடைசியில் வெளியிடுவதாக திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் படத்தின் தயாரிப்பாளருக்கும் கமலுக்கும் இடையே பிரச்சனைகள் உண்டானதால் இரண்டாம் பாகம் தள்ளிப்போனது.

இந்நிலையில் இப்படத்தின் பிரச்சனைகளை சமீபத்தில் பேசி முடித்துள்ளனர். ஏற்கனவே இரண்டாம் பாகத்தின் பல காட்சிகள் முதல் பாகத்தின் போதே படமாக்கப்பட்டு விட்டது. மீதி காட்சிகளை படமாக்க படக்குழுவினர் தற்போது துருக்கி சென்று படப்பிடிப்பைத் துவங்கியுள்ளனர். பின்னர் சென்னை காட்சிகள் படமாக்கப்படும். அதன்பின்னரே படம் வெளியாகும். ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

தமிழரசியல் முகநூல் பக்கத்திற்குச் செல்ல

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*