அனுஷ்காவுக்குத் திருமணமா?

சமீபத்தில் வெளியான பாகுபலி படம் இதுவரை இல்லாத அளவுக்கு பெயரையும், புகழையும் அனுஷ்காவிற்கு பெற்றுத் தந்திருக்கிறது. ஆனால், அவருடைய உடல் எடை தான் தயாரிப்பாளர்களையும், இயக்குநர்களையும் கொஞ்சம் யோசிக்க வைக்கிறதாம்.

பாகுபலி படத்தில், கிராஃபிக்ஸ் மூலம் எடை குறைத்தது போல் குறைத்துக் கொள்ளலாம் என சில தயாரிப்பாளர்கள் முன்வந்தாலும், அனுஷ்கா ஒத்துக் கொள்வதில்லையாம். பழையபடி உடலை மாற்றிய பிறகே புதுப் படங்களில் நடிப்பதாக சபதம் ஏற்றுள்ளாராம். அதனால், ‘5 கோடி ரூபாய் சம்பளம். மிகப்பெரிய ஹீரோ’ என்று சொல்லி, தன்னைத் தேடிவரும் தயாரிப்பாளர்களையும் விரட்டி விடுகிறாராம். கல்யாணத்துக்காகத்தான் புதுப்படங்களைத் தவிர்க்கிறார் என்றும் சிலர் கூறி வருகின்றனர்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*