“ஏர்போர்ட் ராதாகிருஷ்ணன்” :ஸ்டாலின் கிண்டல்!

மத்திய அமைச்சரும் தமிழக பாஜக பிரமுகருமான பொன்.ராதாகிருஷ்ணன் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் அடிக்கடி பேட்டி கொடுத்து வருகிறார். எப்போதும் திமுகவை அழிப்போம், திராவிட இயக்கத்தை பூண்டோடு அழிப்போம் என்பதுதான் அவரது பேட்டியின் மையமாக எப்போதும் இருக்கும்.
அதிமுகவை பலவீனப்படுத்தியுள்ள பாஜக எப்படியானது தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்க கங்கணம் கட்டி களமிரங்கியிருக்கும் நிலையில் , சமீபத்தில் “திமுக காணாமல் போய் விடும்” என்று கூறியிருந்தார் பொன்.ராதாகிருஷ்ணன். இது பற்றி செய்தியாளர்கள் திமுக செயல் தலைவர் ஸ்டாலினிடம் இது பற்றி கேட்டனர். அதற்கு பதிலளித்த ஸ்டாலின்
“ தேர்தலில் யார் காணாமல் போவார்கள் என்பதை மக்கள்தான் முடிவு செய்வார்கள். விமான நிலையத்தில் வரும் போதும், போகும் போதும் பேட்டி கொடுப்பதற்கு என்றே ஒரு மத்திய அமைச்சரை நியமித்துள்ளார்கள். அந்த பணியை சிறப்பாக செய்து புகழ் பெற்று வருகிறார் பொன்.ராதாகிருஷ்ணன்” என்றார்.

1 Comment

  1. அனைவருக்கும் வணக்கம் ,
    நமது தமிழ்நாட்டின் எதிர்க்கட்சி தலைவர் திரு.ஸ்டாலின் அவர்கள் , மத்திய மந்திரியை அருமையாக “ ஏர்போர்ட் -மந்திரி “என்று சொல்லியிருக்காங்க , அருமை ,அதே மந்திரி கன்னியாகுமரிக்கு வந்தால் ,இங்கே கல்லை அள்ளிப்போட்டு ” கடலில் இறங்கும் போர்ட் “ கட்டிருவேன் என்று எச்சரிக்கிறார் ,அவர் கல்லைபோடுவாரோ ,மண்ணை போடுவாரோ, அவங்க கட்சியை குழியில் போட் டுறுவார் அய்யா.

Leave a Reply

Your email address will not be published.


*