‘விக்ரம் வேதா’ டிரெய்லர் ரிலீஸ்: நட்புக்காக சிவகார்த்திகேயன்

விஜய் சேதுபதி மற்றும் மாதவன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘விக்ரம் வேதா’. இந்த படத்தை புஷ்கர்-காயத்ரி இணைந்து இயக்கியிருக்கிறார்கள். ஒய் நாட் ஸ்டுடியோஸ் சஷ்காந்த் தயாரித்துள்ளார். இந்த படத்தில் மாதவன், விஜய் சேதுபதி, வரலட்சுமி மற்றும் ஷ்ரதா ஸ்ரீநாத் ஆகியோட் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இதன் டீஸர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது இதன் டிரெய்லரை வெளியிட முடிவு செய்துள்ளனர். புஷ்கர்-காயத்ரி, இந்த படத்தின் போஸ்ட்-புரொடக்‌ஷன் வேலைகளில் பிஸியாக இருக்கின்றனர்.

இந்நிலையில், ‘விக்ரம் வேதா’ படத்தின் டிரெய்லர் வரும் ஜுன் 22ஆம் தேதி மாலை 5 மணி அளவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த டிரெய்லரை சிவகார்த்திகேயன் வெளியிடுவார் என ஒய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம் உறுதி செய்துள்ளது. இன்றைய தமிழ் சினிமா சூழலில் விஜய் சேதுபதி அளவு நடிப்பு இல்லாது போனாலும், அவருக்கு சமமான போட்டியாளராக திகழ்பவர் சிவகார்த்திகேயன். எனினும் விஜய் சேதுபதிக்கும் இவருக்கும் இருக்கும் நட்பின் காரணமாகவே இந்த டிரெய்லரை வெளியிட அழைக்கப்பட்டிருக்கிறார்.

தமிழரசியல் முகநூல் பக்கத்திற்குச் செல்ல

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*