சென்ற நூற்றாண்டில் வாழ்ந்த அசாதாரண மனிதர்கள்!!

அதிசயங்கள், ஆச்சரியங்கள், மகிழ்ச்சி ஆகியவை செயற்கையாக உருவாக்கப்படும் புனைகதைகளில் மட்டும் இடம்பெறுவதில்லை. இயற்கையில் கூட சில அசாதாரண விஷயங்கள் நிகழ்ந்து அவை வரலாற்றில் இடம்பிடித்துவிடும். அப்படிப்பட்டவர்கள் தான் இந்த அசாதாரண மனிதர்களும். இவர்கள் சென்ற நூற்றாண்டில் வாழ்ந்தவர்கள் ஆவார்கள். அவர்களைப் பற்றி விரிவாகக் கீழே பார்ப்போம்.

ஒட்டகப் பெண் (The Camel Girl): எல்லா ஹார்பர் (Ella Harper) எனும் பெண் 1870-ம் ஆண்டு ஜனவரி 5 அன்று பிறந்தார். இவர் பிறக்கும் பொழுதே அரிதான எலும்பியல் குறைபாட்டுடன்   பிறந்தார். இவருக்கு ஏற்பட்ட அரியவகை ஆர்த்தோபெடிக் நிலையால், கால் மூட்டு பின் பக்கமாக திரும்பியிருந்தது. இதனால், இவர் கால்களை முன்னாள் மடக்கும் வகையில் உருவ மாற்ற நிலை கொண்டார். இதனால் இவருக்கு ‘’ஒட்டகப் பெண் (The camel girl)’’ என அழைக்கப்பட்டார். 1886-ம் ஆண்டுக்கு முன்பு வரை வணிக வேலையில் ஈடுபட்டிருந்தார். இவர் 1921-ம் ஆண்டு இறந்தார்.

எலும்புக் கூடு மனிதன் (The Living Skeleton): ஐசக் டபிள்யூ ஸ்பிரேக் (Isaac W.Sprague) 1841-ம் ஆண்டு மே 21 அன்று பிறந்தார். பிறக்கும் பொழுது சாதரண குழந்தைகள் போல் பிறந்தாலும் அவருடைய 12-வது வயதில் நோய்வாய்ப்பட்ட பின் உடல் எடை குறைய ஆரம்பித்தது. ஆரோக்கியமாக அனைத்து வேளைகளிலும் உணவு சாப்பிட்டு வந்தாலும் அவரது வாழ்நாள் வரை இந்த எடை இழப்பு இருந்து கொண்டிருந்தது. மருத்துவர்கள் தசைநார் வீக்கமடைவதால் தான் உடல் எடை குறைவதாகக் கருத்து கூறினர். இதனாலேயே, அவர் 1887-ம் ஆண்டு இறந்து போனார். தான் வாழ்ந்த காலங்களில் ஒரு பொழுதுபோக்கு கலைஞராக பணியாற்றினார்.

லாப்ஸ்டர் பாய் ( The Lobster Boy): ஜீனியர் கிரேடி பிராங்கிளின் ஸ்டைல்ஸ் (Grady Franklin Stiles,Jr.) 1937-ம் ஆண்டு ஜீன் 26 அன்று பிறந்தார். இவருடைய செயலிழப்பு கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது. அவருடைய கை விரல்கள் மற்றும் கால் விரல்கள் ஆகியவை ஒன்றாக இணைந்து இடையே ஒரு சிறிய இடைவெளியுடன் காணப்பட்டது. இந்தக் குறைபாடு பரம்பரையாக வந்துகொண்டிருக்கும் ஒன்றாகும். அந்த வரிசையில், இந்த ஜீனியர் ஸ்டைல்ஸ் 6-வது நபராவார். சிறுவயதில் இருந்து நல்ல கலைஞராகத் தன்னை வெளிப்படுத்திய ஸ்டைல்ஸ் 2 முறை திருமணம் செய்ததில் 4 பிள்ளைகளுக்கு தந்தையானார். அதில் இரண்டு குழந்தைகளுக்கு இந்தக் குறைபாடு இருந்தது.

நான்கு கால்ப் பெண் (The Four-Legged Girl): மைர்டில் கார்பின் (Myrtle Corbin) 1868-ம் ஆண்டு மே 12-ம் தேதி பிறந்தார். இடுப்புக்கு கீழ் இரண்டு பக்கவாடுகளாகப் பிரிந்தமையால் இரண்டு கால்களுடன் பிறப்பதற்கு பதிலாக நான்கு கால்களுடன் பிறந்துள்ளார். அவருடைய சிறிய உட்புறக் கால்கள் இரண்டும் வெளிக் கால்களும் ஒன்றோடு ஒன்று இணைந்திருக்கும். உட்புறக் கால்களை நகர்த்த முடிந்தாலும் அவற்றை வைத்து நடக்க முடியாது. இவருக்கு திருமணமாகி இருந்தும் இவருடைய பிரச்சினையால் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாமல் போனது இவர் 1928-ம் ஆண்டு மே 6-ந் தேதி இறந்தார்.

இரண்டு சிறுவர், ஒரு தலை (Two boys, one head): 1931-ம் ஆண்டு ஜூலை 17-ந் திகதி லென் அண்ட் எர்னி (Len And Ernie) என்பவர்கள் பிறந்தார்கள். எர்னி சாதரணமாக இரு கை, கால்களுடன் பிறந்திருந்தாலும், அவருடைய சகோதரன் லென் தலையில்லாமல் இரு கை, கால்களுடன் எர்னி மார்பகத்துடன் இணைந்த நிலையில் பிறந்தார். லென் உடல் வளர ஆரம்பிக்க எர்னியின் உடல் நிலை பாதிக்க ஆரம்பித்தது. இதனால், 12 வயதில் லென் உடலில் இருந்து எர்னி பிரிக்கப்பட்டார். தனது சகோதரனைப் பிரிந்ததால் சில வருடங்களில் லென் இறந்து போனார்.

அதிகாரபூர்வமாக இறந்த நபர் (The Most Officially Dead Person): அமிலோவில் வசித்து வந்த லால் பிஹாரி 1975 மற்றும் 1994 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் அதிகாரப்பூர்வமாக இறந்த ஒரு இந்திய விவசாயி ஆவார். அவர் உயிருடன் இருப்பதாகவும், நன்றாக இருப்பதாகவும் நிரூபிக்க அவர் பத்தொன்பது ஆண்டுகளாக இந்திய அதிகாரத்துவத்துடன் சண்டையிட்டார்.

தமிழரசியல் முகநூல் பக்கத்திற்குச் செல்ல

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*