டிஜிட்டல்வாசி : மழை கவிதை எழுதுறவங்க ரோட்ல நடந்துபாருங்க

என்னதான் இவ்ளோ நாள் நாம வெயில்ல கஷ்டப்பட்டு காலத்த ஓட்டி இப்போ மழைக்காலத்துல கொஞ்சம் சந்தோசமா இருந்தாலும், பருவமழை கடந்த சில நாட்களா தொடர்ச்சியா பெய்துறனால விவசாயிகள் சந்தோசப் பட்டுருக்காங்க. ஆனா இந்த ஆபிஸ் போறவங்க குறிப்பா சென்னைல ஆபிசுக்கு போறவங்க சட்டைல சேறடிக்காம போறதுக்குள்ள ரொம்ப கஷ்டப் படுறாங்க. ஆனா வழக்கம் போல நம்ம நெட்டிசன்கள் எல்லாம் மழைக்கவிதை எழுதிட்டு ஜாலியா இருக்காங்க… வாங்க அவங்க என்ன எழுதிட்டு இருக்காங்கனு பாப்போம்…

@ராஜ்குமார் வில்லியப்பன்
சித்ரா தேவி பிரியாக்கள் நிறைந்த smule..
இசை மழையில் நனைய தயாரா…

@Ashwini Sivalingam
சென்னை, மழை, காஃபி ன்னு கவிதை படிக்கிறவங்க கொஞ்சம் ஓரமாய் போய் படிங்க…. கடுப்பாகுது.. ட்ரெஸ் ஃபுல்லா சேறு.
#Chennai_Rain

@Geetha Ganesan
துயர்—சூரி காமெடி
சொல்லொணாத்​ துயர்—தொடர்ச்சியாக சூரி காமெடி….
#ப்ளடி ஆதித்யா சானல்

 

 

 

 

 

 

 

 

 

@ரா புவன்
அடேய் ஃபேமிலி. என் கல்யாண மெனுவுல பிரியாணி இல்லைன்னு சொன்னதைக்கூட பொறுத்துக்கிட்டேன், ஆனா இப்ப கோதுமை ரவை உப்புமா இருக்கனும்னு கட்டாயப்படுத்துறீங்களேடாவ்வ்வ்வ்வ். ???
இதெல்லாம் நியாயமா ப்ரெண்ட்ச்ச்ச் 🙁

@Sathiya Kumar S
: எடுத்ததுக்கெல்லாம் கோவப்படாதீங்க ப்ரோ…
: மொதல்ல சட்டைல இருந்து எடுத்த அம்பதுரூவாய திரும்ப வை நாயே…

@தோணி கௌதம்
கபாலி வந்து ஒரு வருசம்தான் ஆகுது ஆனா அதுக்குள்ள ரஞ்சித் கனவு நிறைவேறிடுச்சு! ஆண்டையரின் கதை முடிக்க..??
பபி

@Kartik Raj P
கடசிக்கு பிட்ச்சு நடுவுல கோமியத்தை தெளிச்சு விட்டிருந்தாகூட இந்தியா ஜெய்ச்சிருக்கும்ல்ல

 

 

 

 

 

 

 

 

@Editör Gowtham
பிரச்சனைகளை காரணமாக கொண்டு நம்மை நாமே வெறுக்கும் நிலை தற்கொலைக்கு சமம்…

@Saranya
பயபுள்ள புதுசா லா காலேஜ் அட்மிஷன் போட்டுருக்கும் போல அட் வே கேட் ஸ்டிக்கர நம்பர் பிளேட் நம்பர் மறச்சி நடு மத்தில ஒட்டிட்டு போது எல்லாம் அகராதி

@சரவணன் கல்யாணசுந்தரம்
ஆரிய திருப்பதி லட்டுக்கு வரி இல்லை
தமிழ் முருகன் பஞ்ஜாமிருதத்துக்கு வரியா?? ஹிந்து விரோத மோடி அரசே பதவி விலகு இல்லை வரியை விலக்கு

@K Vadivel Kuppusamy
ஆசிரியர்: கும்பகர்ணன் மாதக் கணக்கில் தூங்கினான். இது என்ன காலம்?
மோகன் குமார் : கொசுவே இல்லாத காலம் சார் ???
@செந்தில்குமார் நல்லவன்
பத்து நிமிசம் கழிச்சி வீட்டுக்கு போய் சாட் பண்ணு அதுக்குள்ள ஒன்னும் செத்துற மாட்ட
ஆனா இப்படியே சாட் பண்ணிட்டே கார் ஓட்டுனா செத்துருவ நாயே
#பிளடி ராஸ்கல்ஸ்

தமிழரசியல் முகநூல் பக்கத்திற்குச் செல்ல

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*