மழையையும் பொருட்படுத்தாமல் யோகா செய்த மோடி : சர்வதேச யோகா தினம்

உத்திர பிரதேசத்தின் தலைநகரான லக்னோவில் இன்று நடைபெற்ற 3வது சர்வதேச யோகாசன தினத்தையொட்டி பிரதமர் நரேந்திர மோடி, 55,000க்கும் மேற்பட்டோருடன் சேர்ந்து யோகா செய்தார். அந்த சமயம் பார்த்து மழை பெய்ய, மழை பெய்து கொண்டிருந்த நிலையிலும் பிரதமர் உள்ளிட்ட அனைவரும் மலையில் நனைந்து அதனை ரசித்தவாறே யோகா செய்தனர்.

மோடியுடன் உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோரும் கலந்து கொண்டு யோகா செய்தனர். லக்னோவில் உள்ள ரமாபாய் அம்பேத்கர் சபா ஸ்தல் மைதானத்தில் இந்த யோகா நிகழ்ச்சி நடைபெற்றது. பல்வேறு நாட்டுத் தூதர்கள், அரசியல் தலைவர்கள், அமைச்சர்கள், மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள் என பல தரப்பட்டவர்கள் இதில் கலந்து கொண்டனர். மேலும் பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா அகமதாபாத்தில் பாபா ராம்தேவுடன் இணைந்து மக்கள் முன்னிலையில் யோகா செய்துள்ளார்.

இதையடுத்து  லக்னோவில் போலீஸ் சப் இன்ஸ்பெக்டராக இருப்பவர் குல்தீப் சிங். இவர் யோகாவின் பெருமை குறித்து அழகான கவிதை ஒன்றை எழுதியிருந்தார். மேலும் ஜூன் 21 ஐ சர்வதேச யோகா தினமாக அறிவித்ததற்கு நன்றி தெரிவித்திருந்தார். கவிதை குறித்து பிரதமரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு லக்னோவில் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார். அங்கு யோகா குறித்து கவிதை எழுதியதற்காக குல்தீப் சிங்கிற்கு பிரதமர் மோடி நேரில் பாராட்டு தெரிவித்துள்ளார்.

மேலும் தமிழகம் உள்ளிட்ட பல மாநில பள்ளிகளிலும் யோகத்தினத்தை முன்னிட்டு மாணவர்கள் யோகா செய்துள்ளனர். யோகா தினத்தன்று பிரதமர் முதற்கொண்டு பெரும்பாலான மக்கள் அனைவரும் குழுமி செய்வதற்கு பெயர் மட்டும் யோகா அல்ல. உண்மையிலேயே யோகா பயிற்சி என்றால் என்ன? அது எவ்வாறு நம்மை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்கிறது என்பதை மக்களுக்கு உணர்த்த வேண்டும். அதை விடுத்து யோகா பயிற்சியையும் ஒரு மதத்திற்குள் கொண்டு வந்து மக்கள் மத்தியில் திணிப்பது தவறானதாகும்.

தமிழரசியல் முகநூல் பக்கத்திற்குச் செல்ல

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*