தமிழில் வெளியாகியுள்ள பாலாஜி மோகனின் க்யூட் வெப் சீரிஸ் “As i am suffering from kadhal” #Video

அழகான நான்கு ஜோடிகள். அவங்களுக்குள்ள இருக்க உறவுமுறை, புரிதல் அதனால அடுத்து நடக்குற விஷயங்கள் அப்படினு சுவாரஸ்யமான கதையையும் திரைக்கதையையும் அமைச்சு அதுக்கு ஏத்த கதாபாத்திரங்கள கச்சிதமா தேர்வு செஞ்சு இளைஞர்கள் ரொம்ப விரும்பி பார்க்கக்கூடிய வகையில் இந்த சீரிஸ வடிவமைச்சு தந்திருக்காரு. மேலும் பெரிய பிரபலங்கள் யாருமில்லாம இந்த கதையை புது முகங்களையும் அவ்வளவா பிரபலமில்லாதவங்களையும் வச்சு நேர்த்தியா எடுத்திருக்காரு இயக்குனர் பாலாஜி மோகன்.

ஆன்லைன் வெப் சீரிஸ் ட்ரெண்ட தமிழ் சினிமாவுல அழகா தொடங்கி வச்சிருக்காரு. இப்பவே ஹாட் ஸ்டார்ல பாத்துடுங்க. இன்னும் கொஞ்ச நாள்ல பணம் காட்டுனா தான் பாக்க முடியும் அப்படிங்குற மாதிரி கொண்டு வந்துருவங்க. புதுமைகளை அழகா புகுத்துற விதத்துல புகுத்தியிருக்கிறதால இயக்குனர், ரைட்டர் மற்றும் நடிகரான பாலாஜி மோகனுக்கு கைத்தட்டல்களும் விசில்களும்.

தமிழரசியல் முகநூல் பக்கத்திற்குச் செல்ல

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*